Subscribe Us

header ads

Grooms Happy : மணப்பெண்ணுக்குறிய மஹரை கஷ்டப்படும் ஆண்களுக்கு சன்மானமாக பணம் செலுத்தும் அரசாங்கம் எங்கே தெரியுமா?


ரஷ்யாவின் முஸ்லிம் மெஜாரிட்டி குடியரசுகளில் ஒன்றான செசன்யாவில், கொரோனா வைரஸ்சால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இஸ்லாமிய திருமணங்களில், மணப்பெண்ணுக்கு மணமகன் சார்பில் கொடுக்கப்படும் மஹரை திரட்ட கஷ்டப்படுகின்றனர் ஆண்கள்.

இதனை அரசிடம் அவர்கள் கொண்டு செல்ல, செசன்ய குடியரசின் தலைவரான ரம்ஜான் கடிரோவ் (படம்), மஹர் கொடுக்க சிரமப்படும் ஆண்களுக்கு அரசு பொருளாதார உதவிகளை செய்யும் என்ற உத்திரவாதத்தை அளித்ததுடன், ரொக்கமாக 50,000 ரஷ்ய ரூபல்களை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 207 ஆண்கள் இதுவரை பயனடைந்துள்ளதாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான RIA Novosti தெரிவித்துள்ளது.

மஹரை குறைக்க சொல்லி மணப்பெண்களிடம் கோரிக்கை வைக்காமல், மணமகன்களுக்கு தேவைப்படும் பொருளாதார உதவியை செய்திருக்கிறார்கள். மிகச் சரியான அணுகுமுறை. வெரி குட் 

செய்திக்கான ஆதாரம்: https://www.bbc.com/news/blogs-news-from-elsewhere-52979143

Post a Comment

0 Comments