Subscribe Us

header ads

சுற்றுலா : நீலக்கடற்கரைத்தீவு முழு நாள் இரவு Camping (முழு விபரம்) Photos

இது மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்ல நகரிற்கு அண்மையில் நிலாவெல்ல கிராமப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அழகான ஒரு சிறிய தீவு ஆகும். தீவும் நிலமும் ஒரு சிறிய மணல் மேடுடன் இணைக்கப்பட்டுள்ளன. சில நேரங்களில் அது கடல் நீரால் மூடப்பட்டிருக்கும்.

நண்பர்கள் சகிதமாகவோ அல்லது உங்களது குடும்ப சகிதமாகவோ ஒரு நாள் முழுவது முகாமிட்டு தங்குவதற்கு (Camping) ஒரு சிறந்த இடம் என்பதை Tamil Travel Diary ஆகிய நாம் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்

எனவே நீங்கள் புறப்படுவதற்கு கிழே தரப்பட்டிருக்கின்ற தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பை ஏற்படுத்தி முன்கூட்டி அனுமதி பெற்றே செல்ல வேண்டும் இது ஒரு தனி நபர் ஒருவரின் சொத்து ஆகும்.


ஒரு இரவு முழுவதும் முகாமிடுவதற்கு நீங்கள் தயாரானால் உங்கள் முகாமில் 8-25 உறுப்பினர்கள் கட்டாயம் இருத்தல் வேண்டும்


.மாலை 4 மணி முதல் காலை 11 மணி வரை முகாம் செய்யலாம்.

முகாமிடுவதற்குரிய வசதிகள் அத்தனையும் அங்கே உள்ள ஏற்பாட்டாளரால் செய்து தரப்பட்டும் அதற்குரிய கட்டணங்களை நீங்கள் முதலிலேயே செலுத்த வேண்டும்

• முகாம் கூடாரங்கள், முகாம் தீ, BBQ ( மீன் & கோழி) ஆகியவற்றை வழங்குகின்றனர்

• மாலை தேநீர் + இரவு உணவு + மாலைதேநீர் + காலை உணவு வழங்கப்பட்டும்.


முகாமிட்டு ஒரு இரவு முழுவதும் நீங்கள் தங்கினால் இயற்கை உங்களுக்கு ஒரு அழகான பரிசை தருகின்றது அதுதான் அதிகாலையில் நீலக்கடலோடு சேர்ந்த சூரிய உதயம் கட்டாயம் இதை நீங்கள் சந்தோசமாக அனுபவிப்பீர்கள் என நம்புகிறோம்

முகாமிடுதல் சம்பந்தமான மேலதிக விபரங்கள் நண்பர் திரு சுனேத் என்பவருடன் தொடர்பு கொண்டு அறியமுடியும்


(0778102557) / (0712958558)










TamiltravelDiary.Com

Post a Comment

0 Comments