Subscribe Us

header ads

வாகனங்களை கைப்பற்றிய லீசிங் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கம் களத்தில்


கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வாகன கடன்களை செலுத்த அரசாங்கம் நிவாரணம் வழங்கியிருந்தது.

எனினும் பொருட்படுத்தாது, வாகனங்களை கைப்பற்றிய லீசிங் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களுக்கு எதிராக வாகனங்களை கொள்ளையிட்டமை அல்லது கொள்ளை சம்பவம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர், சகல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.

லீசிங் கடனை செலுத்த தவறியுள்ளதாக கூறி, வாகனத்தை கைப்பற்றுவதற்காக லீசிங் அல்லது வேறு நிதி நிறுவனங்கள் முன்வைக்கும் முறைப்பாடுகளை பதிவு செய்யும் முன்னர், அந்த முறைப்பாடுகளை ஆராய்ந்து அரசாங்கம் வழங்கிய நிவாரண காலத்திற்குரிய முறைப்பாடுகளாக இருந்தால் அவற்றை ஏற்க வேண்டாம் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Post a Comment

0 Comments