Subscribe Us

header ads

இலங்கையின் முதலாவது நீருக்கடியில் நிர்மாணிக்கப்பட்ட அருங்காட்சியகம் காலியில் திறக்கபட்டது

இலங்கையின் முதலாவது  நீருக்கடியில் நிர்மாணிக்கப்பட்ட அருங்காட்சியகம் காலி கடலில் திறக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மேற்பார்வையின் கீழ், இலங்கை கடற்படையினரால் காலி கடற் பகுதியில் நீருக்கடியில்  குறித்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை குறித்த அருட்காட்சியகம் கவர்ந்துள்ளதாகவும், கடற்படை தெரிவித்துள்ளது.


குறித்த அருங்காட்சியகம் சிமெந்து மற்றும் முற்றிலும் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களினால் கடற்படை வீரர்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நீருக்கடியில் உள்ள அருங்காட்சியகம் காலி கடற்பகுதியில் சுமார் 50 அடி ஆழத்தில் அமைந்துள்ளது .

நீருக்கடியில் உள்ள அருங்காட்சியகத்தில் புகையிரதப் பெட்டிகளையும்,

 மீன்பிடிப் படகுகளையும் காட்சிக்காக பயன்படுத்த முதலில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து , குறுகிய காலத்தில் புகையிரதப் பெட்டிகளையும், மீன்பிடிப் படகுகளையும் சேகரிப்பதில் சிரமம் இருந்ததால் பல்வேறு வகையான சிலைகள் மற்றும் நினைவுப் பொருட்களைப் பயன்படுத்தி அருங்காட்சியகத்தில் கடற்படையினர் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பவளப்பாறைகளை மீண்டும் உருவாக்குவதும், மீன் வளத்தை அதிகரிப்பதும் ஆகும்.

இப்பகுதியில் மீன் வளர்ப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் எதிர்காலத்தில் டைவ் செய்ய முடியும். 


இலங்கையின் நீருக்கடியில் அமைக்கப்பட்ட முதல் அருங்காட்சியகம் காலியில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருகோணமலை மற்றும் தங்காலை ஆகிய இடங்களில் மேலும் இரண்டு நீருக்கடியில் அருங்காட்சியகங்களை உருவாக்க கடற்படை திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Post a Comment

0 Comments