Subscribe Us

header ads

விமான டிக்கெட் முன்பதிவு செய்ய தற்போதைய மருத்துவ சான்றிதழ் அவசியம் - சவுதி அரேபியா

விமானங்களில் பயணம் செய்வதற்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் போது, பயணிகள் தங்களது தற்போதைய ஆரோக்கியத்தை தெரிவிக்கும் வகையிலான மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். கொரோனா வைரஸின் பரவலைக் குறைக்க சிவில் ஏவியேஷன் இதனை அறிவித்துள்ளது. சர்வதேச விமானங்கள் மிகக் குறைவாகவே இயக்கப்பட்டாலும், உள்நாட்டு விமான போக்குவரத்து ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றது. மேலும் விவரங்கள் கீழே:

விமான டிக்கெட் முன்பதிவு செய்ய தற்போதைய மருத்துவ சான்றிதழ் அவசியம்

ஒவ்வொரு பயணியும் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தங்களது உடல்நிலையை தெரிய படுத்தும் வகையிலான மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இது, டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் ஒரு பகுதியாகும். ஏதேனும் நோய் அறிகுறிகள் இருந்தால், பயணிகள் உரிய தகவலை வெளியிட வேண்டியது அவசியம்.
மற்றொரு குறிப்பில், குழந்தைகளுக்கு கவலை மற்றும் பயத்துடன் இல்லாமல் இருக்கும் வகையில், நோய்த் தடுப்பு வழிமுறைகள் அவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என ஆரம்ப சுகாதார பராமரிப்பு உதவி செயலாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments