அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பான புத்தளம் வாழ் முஸ்லிம் மக்களே!
கடந்த தேர்தல் காலங்களின் கசப்பான நினைவுகளை நாம் மறந்துவிடுவோம்.
நடந்தவைகளை சுட்டிக்காட்டி பிரிந்து நின்று நாம் மோதிக்கொள்வதைவிட
நடக்கப்போகும் விடயங்களை நினைத்து நாம் கைகோர்ப்போம்.
எமது சமூகத்தின் விரல்களைக்கொண்டு எம் சமூகத்தின் கண்களை குருடாக்குவதா?
தேர்தல் முடிந்துவிட்டது அல்லாஹ் தான் நாடியவருக்கு அந்த வெற்றியை கொடுத்துவிட்டான்.
அந்த வெற்றியில் நாம் பங்காளிகளாக இருந்திருக்க வேண்டும் ஆனால் நாம் அதனை தவற விட்டுவிட்டோம்,
என்றாலும் எமது சமூகத்தின் எதிர்காலம், எமது சந்ததிகளின் சுபிட்சமான வாழ்வை கருத்தில் கொண்டு நிதானமாக சிந்திப்போம்.
நாம் ஒருவரை ஒருவர் விரல் நீட்டி குற்றம் சுமத்துவத்தை விட்டுவிட்டு இன்றிலிருந்து எமது சமூகத்திற்கான புதிதொரு அரசியல் பாதையை, புதியதோர் அத்தியாயத்தை உருவாக்கி புத்தளம் - குடியேற்றவாசிகள் என்ற பேதங்களை மறந்து - புறந்தள்ளி ஒன்றாய் ஒற்றுமையாய் கைகோர்த்து பயணிக்க எம்மோடு இணைந்து கொள்ளுமாறு மீண்டும் புத்தளம் வாழ் மக்களைஅன்போடு இரு கரம் ஏந்தி அழைக்கின்றேன்.
நன்றி
உவைஸ் அபுசாலிஹ்
0 Comments