நான் Jvp கூட்டத்திற்கு பகல் ஒரு மணியளவில் சென்றேன்.நிஹால் கலபத்தி mpயும் நானும் பரிசோதனை செய்து உள்ளே அனுப்பும் என்ட்ரஸில் நின்றோம்.
தொடை தெரியும்படியான ஆடைகளுடன் வந்த பெண்களும் அனுமதிக்கப்படவில்லை.
சிங்கள பெண்கள் லமா சாரியும்,இந்துப் பெண்கள் சாரியும்,முஸ்லிம் பெண்கள் அபாயாவும் அணிந்து வந்தார்கள்.அவர்களுக்கு எங்களது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தோம்.
அவர்களது இம்முயற்சியை பார்த்து பலருக்கு ஆனந்தக் கண்ணீர் கசிந்தது.
சோற்றுப்பார்சல்களும்,தண்ணி போத்தல்களும் வழங்கப்படவில்லை.
கைக்கு ஐயாயிரம் வழங்கப்படவில்லை,பஸ் பிடித்து இலவசமாக ஏற்றி இறக்கவில்லை.பஸ் டிக்கெட் எடுத்து பஸ் ஏறி கூட்டத்திற்கு வந்திருந்தார்கள்.
இவை அனைத்தையும் விட இனவாதம் கிஞ்சித்தும் இல்லாத தேசத்து மூவின மக்களையும் கண்டோம்.
அன்பாய் மனிதர்களை நேசிக்கும் ஒரு பரம்பரை உருவாக்கத்தை கண்டோம்.
இதை உருவாக்க எவ்வளவு கஸ்டப்பட வேண்டி இருக்கும்.
வாழ்த்துக்கள் JVP.
From a Fb post
0 Comments