அழிவின் உச்சக்கட்டம். . . இருண்ட உலகின் முதல் இடத்தைப் பிடித்துள்ள போதைப்பொருள்...
கிறிஸ்டல் மெத் (Crystal Meth)
பொதுவாக அனைவராலும் அறியப்பட்ட பெயர்: ஐஸ்
இந்த போதைப்பொருள் ஐஸ் கட்டி போன்ற தோற்றம் பெற்றதாலேயே இது "ஐஸ்" என்ற பெயர் பெற்றது. ஆனால் இப்போது வேறு பல வடிவங்களில் வருவதாக அறியக்கிடைத்தது.
இந்த "ஐஸ்" என்ற போதைப்பொருள் எவ்வாறு மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றது என்றால், நீங்கள் பார்த்திருப்பீர்கள் உலகில் மிகப்பிரசித்தி பெற்ற தொடர் நாடகமான "Breaking Bad" என்ற அக்கதையில் இடம்பெற்ற "Walter White" என்ற கதாப்பாத்திரம். இக்கதாபாத்திரம் மூலமும் "Breaking Bad" என்ற தொடர் நாடகத்தின் மூலமுமே இப்போதைப்பொருள் பற்றி மக்கள் மத்தியில் பிரசித்தப்படுத்தப்பட்டது.
ஆனால் இப்போதைப்பொருள் 1800 வருடங்களுக்கு முன்னர் இருந்தே பாவிக்கப்பட்டு வந்தது என்றால் யாரும் நம்பமாட்டார்கள்.
ஆம். 1893ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த போதைப்பொருள் 2ஆம் உலக யுத்தத்தின் போது இராணுவ வீரர்களின் சுறுசுறுப்புத் தன்மையை அதிகரிக்கும் ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. (ஹிட்லர் இன் யுத்த சரித்திரம்)
ஆகவே, எதோ ஒரு வகையில், 2ஆம் உலக யுத்தமும் இந்த "ஐஸ்" என்ற போதைப்பொருள் உருவாக ஒரு காரணமாக இருந்துள்ளது என்பதை யாராலும் மறக்க முடியாது. ஹிட்லர் ஏதோ ஒரு வகையில் யுத்தத்தை ஜெயிக்க இந்த போதைப்பொருளை தனது யுத்த வீரர்களுக்கு மத்தியில் பயன்படுத்தியுள்ளான் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. (ஆனாலும் இறுதியில் ஹிட்லர் கூட கடைசியில் தோல்வியுற்றான்)
இன்றைய காலகட்டத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா உட்பட பல நாடுகளின் அதிகமான பெண்கள் கூட இந்த போதைப்பொருளுக்கு அடிமையாக்கப்பட்டுள்ளது மிகவும் கவலைக்குரியது.
மற்றைய போதைப்பொருள்களை பார்க்கவும் இந்த "ஐஸ்" போதைப்பொருள் இலகுவாக கிடைப்பதால் மக்கள் மத்தியில் இது இலகுவாக புழக்கத்தில் இருக்க ஒரு முக்கிய காரணியாகும்.
இந்த "ஐஸ்" போதைப்பொருளை உட்கொள்ளும் ஒருவருக்கு தற்காலிக சந்தோசம், தன்னம்பிக்கை, தற்காலிக உடல் வலிமை மற்றும் உற்சாகம் போன்றவை ஏற்படுவதாகவே அறியக்கிடைத்தது.
ஆனாலும் இந்த அற்ப மாய சுகங்களால் ஈர்க்கப்பட்டு இதற்கு அடிமைப்படுத்தப்பட்டுள்ள பாவனையாளர்களுக்கு இந்த "ஐஸ்" போதைப்பொருள் மெது மெதுவாக உடலில் கலந்து பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கூட அறியாதவர்களாக இருப்பது மிகவும் கவலைக்குரியது.
தூங்க நினைக்கும் பொழுதெல்லாம் தூங்க விடாமல், பசிக்கும் போது கூட எதையும் சாப்பிட முடியாமல் சாப்பாட்டின் மீது வெறுப்பை ஏற்படுத்தி மற்றும் தொடர்ந்து வாந்தி எடுக்க வைக்கும் பயங்கர நோய்...
இவற்றை படித்ததும் நினைத்தீர்கள் தானே இது என்ன புதுவிதமான பயங்கர நோய் என்று? நான் இன்னும் சொல்ல ஆரம்பிக்கவே இல்லை...
இது போன்ற சின்னஞ்சிறு நோய் அறிகுறிகளின் மூலம் ஆரம்பித்து சிறு வயதிலேயே பற்கள் விழுவது இன்னும் ஒரு அறிகுறி. பின்னர் உடலில் காணப்படும் திசுக்கள் மிக விரைவில் அழிந்து போய் மனது குழம்பி பைத்தியம் ஏற்படும். பின்னர் தன்னையே தான் மறந்து செத்த பிணம் போல இருக்க வேண்டிவரும். (இது போன்ற பல போதைப்பொருள் அடிமைகளை சிறைச்சாலையில் காணலாம்.) கடைசியில் மாரடைப்பு வந்து இறந்து போவதை தவிர வேறெதுவும் இந்த போதைப்பொருளால் கிடைப்பதில்லை.
இப்போதைப்பொருளின் கடைசி இலக்கும் மூளையை அழிப்பதாகும். மூளையின் இரத்த நாளங்களை அழித்து சிறிது சிறிதாக உயிரை கொள்ளும் எமனாக மாறிவிடுகின்றது. உலகில் தரப்படுத்தப்பட்ட முதல்தர உயிர்கொல்லி போதைப்பொருள் பட்டியலில் இந்த "ஐஸ்" என்ற போதைப்பொருளை உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
0 Comments