Subscribe Us

header ads

இது நாம் வெல்லக்கூடிய ஒரு போர். - அனைவரும் வாருங்கள் அநுர திசாநாயக்க நாட்டு மக்களுக்கு அழைப்பு


இது நாம் வெல்லக்கூடிய ஒரு போராட்டம்  தோழர் அனுரா திசாநாயக்க, தேசிய மக்கள் படையின் ஜனாதிபதி வேட்பாளர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இந்த நாட்டின் மக்கள் என்மீது வைத்த நம்பிக்கை மீறப்படாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நான் தம்புதேகமாவிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தேன், கடந்த முப்பது ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன் . பின்னடைவுகள் மற்றும் சவால்களுடன் நாங்கள் அரசியல் செய்கிறோம். தொலைதூர கிராம மக்கள் தொடக்கம் அனைத்து தரப்பு மக்களின் அனுபவத்தின் அடிப்படையில் தொடங்கப்படும் இந்த போராட்டம் நிச்சயமாக வெற்றியில் முடிவடையும்.
ஜனாதிபதி தேர்தலில் நாடு ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளது. இங்கு இரண்டு பாதைகள் காணப்படுகின்றன 71 ஆண்டுகளாக நாட்டை அழிவுகரமான பாதைக்கு இட்டுச்செல்கின்ற பாதை மற்றொன்று மகிழ்ச்சி மற்றும் சுதந்திரம் நிறைந்த செழிப்பின் பாதை. செழிப்புக்கான பாதையைத் தேர்வு செய்வதற்கு அனைத்து மக்களையும் அழைக்கிறோம். ஊழல் அரசியலில் இருந்து தேசத்தைக் கட்டியெழுப்பும் அறிஞர்கள் மற்றும் நாட்டை நேசிக்கும் உழைக்கும் மக்கள் ஆகியோரை கொண்ட புதிய வெகுஜன இயக்கம் நாட்டிற்கான வழியைக் காட்டுகிறது.
அரசியல் அதிகாரம் இப்போது ஒரு ஊழல் கும்பலின் கைகளில் இருக்கின்றது. இதுவே அரசியலை சமுதாயத்திற்கு ஒரு அருவருப்பான செயலாக மாற்றியுள்ளது. இந்த ஊழல் நிறைந்த அரசியல் அரங்கை சுத்தம் செய்வோம் என்று சபதம் செய்கிறோம். நாடு ஒரு புதிய பொருளாதார பயணத்தை எடுக்க வேண்டும். இது உற்பத்தி அடிப்படையிலான பொருளாதாரத்தை உருவாக்குவதாக அமைய வேண்டும் அதன் நன்மைகள் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் சமூகத்திற்கு சென்றடைய வேண்டும்.
இந்த சமுதாயத்தில் ஏராளமான மக்கள் பல்வேறு காரணங்களுக்காக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேசியம், சாதி மற்றும் பாலின அடிப்படையில் பாதிக்கப்படுகின்றனர். எல்லா அநீதிகளையும் ஒழிப்பதற்காகவும் , அவர்கள் அனைவரையும் ஒரு சிறந்த மனித சமூகத்தின் ஒரு பகுதியாக ஆக்குவதற்காகவும் நாங்கள் செயற்படுவோம் என உறுதியளிக்கின்றோம்.
பொது பாதுகாப்பு குறித்து இன்று ஒரு விவாதம் நடைபெறுகிறது. இன்று, பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் சில கிராமங்களின் எல்லை புரங்களில் போலீஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு இனவாதியாலும் அல்லது தீவிரவாதியாலும் இந்த சோதனைச் சாவடிகளை அகற்ற முடியாது. அவர்களால் அதனை அதிகரிக்க மட்டுமே முடியும். இந்த நிலைமைகளை அகற்றி ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கி அதில் தேசிய ஒற்றுமை நிறுவப்படும், அங்கு சந்தேகம் நீக்கப்படும்.
சுதந்திரம் மற்றும் சரியான கருத்துக்கள் காரணமாக மனித சமூகம் முன்னிலைக்கு வந்ததுள்ளது. மனிதனின் இத்தைகைய சுதந்திர கருத்துக்களை பெட்டியில் வைத்து மூடி வைக்க முடியாது. இத்தகைய சுதந்திரமான சிந்தனைகள் ஜனநாயக சூழலை உருவாக்க உறுதியளிக்கின்றன. நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழிக்கவும், பாராளுமன்றம் அதிகாரம் செய்யும் அரசியல் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நம் நாட்டில் ஒரு சிறந்த பல்லுயிர் சுற்றுச்சூழல் அமைப்பு இருந்தது. லாபத்தைத் நோக்கமாக கொண்ட இந்த அரசியல் சமூக அமைப்பு அதை அழித்து நாசமாக்குகின்றது. இந்த நாடு சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் குப்பைக் கொட்டையாக மாறியுள்ளது. எமது எதிர்கால குழந்தைகளுக்கு விஷம் இல்லாத ஒரு பழத்தையும், விஷம் இல்லாத ஒரு சொட்டு நீரையும், புதிய காற்றின் சுவாசத்தையும் கொடுப்பதற்காகவே நாங்கள் இந்த அரசியல் போராட்டத்தை நடத்துகின்றோம்.

நாம் அடையும் சமூக வளர்ச்சியின் பலன்களை மக்கள் பெறும் ஒரு சமூகத்தை நாம் நிறுவ வேண்டும். சிறு குழந்தைகளுக்கு தெளிவான எதிர்காலம் இருக்கும், இளைஞர்கள் தங்கள் திறமைகளால் பயனடைவார்கள், பெரியவர்கள் பாதுகாப்பாக இருக்கும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும். எங்களுடைய லட்சிய கனவு அதுவாகும்.
அமெரிக்க கறுப்பு இன புரட்சிகர தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஒருமுறை கூறினார்: இந்த உலகத்தின் சோகத்துக்கு காரணம் கெட்டவர்களின் தீய செயல்கள் அல்ல, நல்லவர்களின் மௌனம்தான் காரணம். இந்த துயரத்தால் மக்கள் பாதிப்பு அடைகின்றார்கள். ஆனால் மாற்றத்திற்கு நாம் தலையிடாவிட்டால் எந்த பயனும் இல்லை. லச்சக்கணக்கான மக்களாக இங்கு வருகை தந்த நீங்கள் எங்களுக்கு ஊக்கமளிக்கிறீர்கள். நீங்கள் ஒருபோதும் வருத்தப்பட மாட்டீர்கள் என நாங்கள் உறுதியளிக்கிறோம்.
நம் மக்களை உண்மையான நேர்மையான மக்களாக மாற்ற வேண்டும். இந்த நாட்டை உலகில் பிரமிக்க வைக்கும் நாடாக மாற்ற வேண்டும். இந்த போராட்டத்திற்கு அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பதன் மூலம் இதைச் செய்ய முடியும். இது நாம் வெல்லக்கூடிய ஒரு போர். இந்த செய்தியை அனைவருக்கும் எடுத்துச் சென்று சொல்லுங்கள். அவ்வாறு செய்ய உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

Post a Comment

0 Comments