Subscribe Us

header ads

சிலர் அரசியல் ஆதாயங்களுக்காக முஸ்லிம்களை ஓரங்கட்ட முயற்சிக்கிறார்கள் - பிரதமர் தெரிவிப்பு


சிலர் அரசியல் ஆதாயங்களுக்காக முஸ்லிம்களை ஓரங்கட்ட முயற்சிக்கிறார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருணாகலை, மாவதகம, பரகஹதெனிய தேசிய பாடசாலையில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை  (18) பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்ததன் பின்னர்,  உரையாற்றும் போதே இதனைக் கூறியுள்ளார்.
முஸ்லிம்கள் தங்களைப் பாதுகாப்பார்கள் என சிங்கள மன்னர்கள் நம்பினர். 1815 ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள் கையெழுத்திடவில்லை.
இன்று சிலர் முஸ்லிம்களை ஓரங்கட்ட முயற்சிக்கின்றனர். அது அவர்களின் சொந்த அரசியல் லாபங்களுக்காகவே ஆகும்.
எந்த மதத்திலும் தீவிரவாதிகள் உள்ளனர்.  அவர்களை அந்த மதத்திலிருந்து விலக்கி விடுவதன் மூலமே அவற்றை நிறுத்தலாம். அந்த தீவிரவாத செயல்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

Post a Comment

0 Comments