பொதுவாக Facebook இலோ, அல்லது நேரடியாகவோ என்னிடம் பலபேர் கேட்கும் கேள்விகள் இவை.
1. நேற்று ஒரு Email வந்தது. அமெரிக்காவிலிருந்து ஒரு பெண்மணி அனுப்பி இருந்தார். அவரின் கணவர் இறந்து விட்டதாகவும், அவரின் வங்கிக் கணக்கில் கோடிக் கணக்கான பணம் இருப்பதாகவும், ஆனால் அதனை எடுக்க ஒரு லட்சம் ரூபாய் தேவைப் படுவதாகவும், முடிந்தால் (குறித்த வங்கிக் கணக்கிலக்கமொன்றை வழங்கி) அதற்கு பணம் அனுப்பும் படியாகவும், அந்த கோடிகளை மீட்டிய பின்னர் உங்களுக்கு பாதிக் கோடியைத் தருவதாகவும் சொன்னர். இதற்கு எனன செய்ய நான்? (அவளின் புகைப்படங்களையும் அனுப்பி வைத்திருந்தாள்).
1. நேற்று ஒரு Email வந்தது. அமெரிக்காவிலிருந்து ஒரு பெண்மணி அனுப்பி இருந்தார். அவரின் கணவர் இறந்து விட்டதாகவும், அவரின் வங்கிக் கணக்கில் கோடிக் கணக்கான பணம் இருப்பதாகவும், ஆனால் அதனை எடுக்க ஒரு லட்சம் ரூபாய் தேவைப் படுவதாகவும், முடிந்தால் (குறித்த வங்கிக் கணக்கிலக்கமொன்றை வழங்கி) அதற்கு பணம் அனுப்பும் படியாகவும், அந்த கோடிகளை மீட்டிய பின்னர் உங்களுக்கு பாதிக் கோடியைத் தருவதாகவும் சொன்னர். இதற்கு எனன செய்ய நான்? (அவளின் புகைப்படங்களையும் அனுப்பி வைத்திருந்தாள்).
2. குறித்த ஒரு கம்பெனியில் வேலை கிடைத்திருப்பதாக அமெரிக்காவிலிருந்து Email வந்தது. வேலைக்காக ஒருசிலரையே தெரிவு செய்திருப்பதாகவும், தங்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்திருப்பதாகவும், சிறிய ஒரு தொகை பணம் அனுப்புவீர்கள் என்றால், தங்களுடைய வீசா சம்பந்தப்பட்ட விடயங்களைச் செய்ய முடியுமென்றும், அவற்றுக்குக் டாசு செலுத்துமாறும் Emails வருகின்றன.
3. Lottary visa வில் தாங்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளதாகவும், அமெரிக்காவிற்கு விசா கிடைத்து விட்டதாகவும், குறித்த தொகை பணம் தெலுத்தப் படுமாயின், பணத்தை வைத்து வீசா ஏற்பாடுகளைச் செய்யுமாறும் வரும் Emails/ WhatsApp messages.
4. அமெரிக்க அரசிங்கமோ, அல்லது, குறித்த உள்நாட்டு அமெரிக்க தூதரகங்களோ, அவற்றின் அதிகார பூர்வ இணையத்தளங்களில் வெளியிடாத, தாங்களுக்கு லொத்தர் மூலம் அமெரிக்கா வீசா கிடைத்து விட்டதாக வரும் Emails/ WhatsApp messages.
இன்னும் என்னென்ன வழிகளிலேனும் தாங்களுக்கு குறித்த ஒரு வாய்ப்பு கிடைத்து விட்டதாகவும், குறித்த "லட்சத் தொகை" கட்டுமிடத்து அவற்றுக்கு வாய்ப்புக் கிடைப்பதாகவும் வரும் செய்திகள் எந்தவிதத்திலும் உண்மையில்லை.
மத்திய கிழக்கு நாடுகளைப் போலல்லாது, அமெக்காவில், குறித்த தனிநபராலோ, அல்லது கம்பனியாலோ வேலைக்கு ஒருவருக்கு வீசா அனுப்ப முடியாது. அந்த முறைமைகள் இங்கு இல்லை. ஒருசில வேளை கம்பெனி Logo க்களுடன், அல்லது Website களுடன் Email கள் வரும். ஏமாற்ற நினைப்பவனுக்கு ஒரு கம்பனி Logo வோ, அல்லது, website டோ ஆரம்பிப்பது பெரிய விடயமல்ல.
H1B என்ற வேலைக்காக வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வந்து வேலை பார்க்கும் ஒரு வீசா முறைமை உள்ளது. ஆனால் அது குறித்த ஒரு கம்பெனியினால், வெளிநாட்டிலுள்ள வேலை தேடுபரிடம்/ தொழிலாளியிடம் (Employee) உரிய ஆவணங்களைப் பெற்று, முறையான ஆட்சேர்ப்பு முறைகள் (recruitment methods) மூலமே அவர்கள் உங்களுக்கான visa வினை அமெரிக்க தூதரகங்களினூடாக வழங்குவர்.
மாறாக உங்களுக்கு வேலையோடு visa ஒன்று காத்திருக்கிறது. காசு அனுப்புங்கள். வந்ததும் வேலை, என்று காசு கேட்க மாட்டார்கள்.
அத்தோடு கணவன் இறந்ததும் அவரது கோடிக் கணக்கான சொத்துக்களை வங்கிகள் முடக்கும் முறைமைகள் (எனக்குத் தெரிந்தவரை) இங்கு இல்லை. காசு கட்டித்தான் பெருந்தொகை பணத்தை மீட்க முடியுமென்ற பொய்களை நம்பி விடாதீர்கள். குறிப்பாக இப்படி அனுப்புபவர்கள் யாருடையவாவது கவர்ச்சியான புகலப்படங்களையே தங்களுடையது என்று அனுப்புவர். அதன் மூலம் ஆண்களை மடக்கி பணம் பறிக்க முற்படுவர்.
அத்தோடு மிக முக்கியமாக, இந்த Lottary Visa க்களுக்கு Apply பன்னும் போது வெறுமனே Google இல் சென்று search bar இல் தட்டுவதன் மூலம் பெறப்படும் Links க்குள் சென்று உங்களுடைய தகவல்களை வழங்க வேண்டாம். ஒருசிலர் இந்த Lottary visa விற்கு Apply பன்னும் போது காசு கேட்பதாகவும், செலுத்த வேண்டுமா என்றும் கேட்டிருட்கிறார்கள். அவை அனைத்தும் போலியான முகவரிகளாகும்.
Google இல் வெறுமனே search பன்னும் போது, இணையத் திருட்டில் ஈடுபடுவோர், தங்களது போலி முகவரிகளை முதலில் வருவதற்குப் போல ஏற்பாடு செய்து வைத்திருப்பாரகள். எனவே நீங்கள் போய் search bar இல் அடித்து விட்டு (முதலில்) வரும் link ஐத் தட்டினால், உங்களைப் போலியான (உண்மை போன்றே வடிவமைக்கப்பட்ட) முகவரிகளுக்குள் எடுத்துச் செல்லம். பார்ப்பதற்கு உண்மையானது போன்றே இருக்கும். ஆனால் அவற்றில் வங்கி விபரங்களை வழங்குவீர்கள் என்றால் உங்கள் பணத்தினை அவர்கள் திருடக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
அத்தோடு இந்த Lottary visa வில் முதலில் Apply பன்ன முற்றுமுழுதாக இலவசமானதாகும். வெறுமனே உங்களைப் பற்றிய தகவல்களை மாத்திரம் நிறப்புவதற்காக உள்ளவையே. (நீங்கள் Facebook கணக்கொன்றை ஆரம்பிக்க என்ன செய்தீர்களோ, அதே போலவே) இவற்றை வைத்து Internet cafe செய்யும் சிலர், காசு வாங்கி நிறப்பிக் கொடுப்பதாக internet cafe களுக்கு முன்னால் ஒட்டப்பட்டிருந்த posterகளைக் கண்டிருக்கிறேன். அவ்வாறு பணம் செலுத்தி ஏமார்ந்து விடாதீர்கள்.
இந்த Lottary visa விற்கான சரியான முகவரியை இலங்கைக்கான US Embassy இன் அதிகாரபூர்வ இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இது தவிர்ந்த, ஏதேனும் நீங்கள் தொடர்ந்தேர்ச்சியாகவோ, அல்லது உங்களுக்கு சந்தேகத்துக்கிடமான visa சம்பந்தமான தகவல்களையோ பெறவேண்டுமெனில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூரகத்தைத் (தொலைபேசி மூலமோ, அல்லது Email மூலமோ) தொடர்பு கொள்ளுங்கள்.
யாராவது பணம் கேட்டாலோ, அல்லது வெறுமனே உங்களுக்கு சம்பந்தமில்லாத ஒருவர் உங்களுடைய கணக்கிற்கு லட்சக்கணக்கான பணத்தை தரப் போதவாகச் சொன்னால் உசாராகிக் கொள்ளுங்கள். உங்களை முன்பின் தெரியாத ஒருவன் எவ்வாறு உங்களுக்கு கோடிக் கணக்கில் உதவ முன்வர முடியும்?
உங்களது Bank account number ஐயோ, அல்லது Routing number ஐயோ எந்தக் காரணம் கொண்டும் கொடுத்து விடாதீர்கள். அந்த இரண்டு இலக்கங்களும் இருந்தால் உலகில் எந்த மூலையிலிருந்தும் உங்களது பணத்தை online மூலம் திருடுவதற்கான வாய்ப்புக்கள் மிக மிக அதிகம் உள்ளது. அத்தோடு உங்களது Credit card number களை நம்பிக்கையான இணையத்தளங்கங்கள் தவிர்ந்த ஏனைய இணையத்தளங்களுக்கு கொடுத்து விடாதீர்கள். அவ்வாறே வியாபார நோக்கங்களுக்காக கொடுக்க வேண்டுமென்றால், PayPal போன்ற சேவைகள் மூலம் செலுத்துவதாகச் சொல்லுங்கள்.
போலிகளைக் கண்டு ஏமார்ந்து விடாதீர்கள்.
-சாபித் தாஹா-
0 Comments