Subscribe Us

header ads

கல்பிட்டி பிரதேச சபை மற்றும் பேர்ள்ஸ் விளையாட்டுப் கழகம் இணைந்து நடாத்தும் மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி


கல்பிட்டியின் பழமைவாய்ந்த விளையாட்டுக்களின் ஒன்றான உதைப்பந்தாட்ட ரசிகர்களை மகிழ்விக்கும் முகமாகவும் வளர்ந்து வரும் இளம் வீரர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் கல்பிட்டி பேர்ள்ஸ் உதைப்பந்தாட்ட கழகத்தின் ஏற்பாட்டில் கல்பிட்டி பிரதேச சபையின் பூரண அனுசரனையில் எதிர் வரும் 17 மற்றும் 18ம் திகதிகளில் கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் Kalpitiya Football League 2019 பிரமாண்டமான சுற்றுப போட்டி நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கல்பிட்டி 33 வருட வரலாற்றில் உதைப்பந்தாட்ட விளையாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட இன்றுவரை அதன் வளர்ச்சிக்காக அயராது ஒத்துழைப்பு வழங்கி வரும் சுமார் ஐம்பது உதைப்பந்தாட்ட வீரர்களை கெளரவித்து பாராட்டும் வரலாற்று நிகழ்வும் நடைப்பெறவுள்ளது ,

ஆகவே கல்பிட்டி வாழ் விளையாட்டு ரசிகர்களை இச்சுற்றுப் போட்டியை கண்டு களிக்க வருகை தருமாறும் கல்பிட்டியின் உதைப்பந்தாட்ட சாதனையாளர்களை கெளரவப்படுத்தி உங்கள் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ள அன்போடு அழைக்கிறோம்.

ஏற்பாட்டுக் குழு.

-R Hussain-

Post a Comment

0 Comments