Subscribe Us

header ads

அனல் பறக்கும் சூட்டை தணிக்க நீல நிறப் பாதைகளை அறிமுகம் செய்தது கத்தார்!

கத்தாரின் அல் வாகிப் சந்தை வீதியின் ஒரு பகுதி நீல நிறத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது. பாதைகளுக்குப் பொறுப்பான ”Ashghal” பொதுத்துறை அமைச்சகத்தினால் ‘pilot project for cool pavement’. என்ற பெயரில் முதன் முதலாக அல்வாகிப் சந்தையின் ஒரு பகுதி நீல நிறத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சாத்தமாக 200 மீற்றம் தூரமான பகுதி நீல நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டு நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் இந்த செயற்றிட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டத்தின் பெறுவேறுகளின் அடிப்படையில் எதிர்கால நகர்வுக்கான முடிவுகள் எடுக்கப்படும் என்பதாக மேற்படி அமைச்சகம் தெரிவித்துள்ளது.





Post a Comment

0 Comments