Subscribe Us

header ads

மொபைல் அப் பயன்படுத்தி குப்பைகளை அகற்றும் சேவை.


எம்பிலிபிட்டிய மற்றும் மினுவங்கொட நகர சபைகள் மொபைல் அப் ஒன்றைப் பயன்படுத்தி தமது பிரதேசங்களில் குப்பைகளை அகற்றும் பணிகளை செய்து வருகின்றன.
குறித்த அப் இல், கூகுல் வரைபடங்களின் உதவியுடன் குப்பை காணப்படுகின்ற இடங்களை இந்த பிரதேசவாசிகள் அடையாளப்படுத்த முடியும் என்பது மாத்திரமன்றி கழிவகற்றல் தொடர்பில் முறைப்பாடுகளைச் செய்யக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி கழிவகற்றும் சேவையில் ஈடுபடுகின்ற வாகனங்கள் எந்த வீதியால் பயணிக்கின்றன என்ற விபரங்களைக் கூட அவதானிக்கக் கூடியதான ஜீ.பி.எஸ் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மக்களால் வழங்கப்படும் தகவல்களை அதிகாரிகளும் கழிவகற்றல் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற ஊழியர்களும் அறிந்து கொண்டு இலகுவான கழிவகற்றல் சேவைகளைச் செய்யக் கூடியதாகவுள்ளதாக அந்த நகர சபைகளின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த மொபைல் அப்பை ஒரு பல்கலைக்கழக மாணவனே உருவாக்கிக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments