Subscribe Us

header ads

(இன்றைய நிலவரம்) டாக்டர் ஷாபியின் விடுதலை என்பது அவரது தனிப்பட்ட விடுதலை மட்டுமல்ல...!


முழு முஸ்லிம்களையும் தீவிரவாத குற்றச்சாட்டிலிருந்தும், அப்பட்டமான பொய்களிலிருந்தும் பரிசுத்தப்படுத்தும் ஒரு விடுதலையாகும்.
குருநாகல் நீதவானினின் நியாயமற்ற நடத்தைக்கு எதிராக குற்றப்புலனாய்வு துறை(CID), டாக்டர் ஷாபியின் மனைவி மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் உட்பட இதுவரை மூன்று புகார்கள் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ள போதிலும் குருநாகல் நீதவானுக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவில்லை.
மறுபக்கம் குற்றப்புலனாய்வு துறைக்கு எதிராக குருநாகல் நீதவானும் IGP யிடம் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இன்று இடம்பெற்ற பாராளுமன்ற தெரிவுக்குழு சாட்சியத்தில் ஆஜரான குற்றப்புலனாய்வு துறை இயக்குனர் “ஷானி” அவர்கள் குருநாகல் நீதவானுக்கு எதிரான பல ஆதாரங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
டாக்டர் ஷாபிக்கு எதிரான வழக்கின் விசாரணை நாளை(25) குருநாகலில் இடம்பெறவுள்ள நிலையில் வழமை போன்று டாக்டர் ஷாபிக்கு எதிராக இனவெறியர்கள் அங்கு பலமான ஆர்ப்பட்டங்களில் ஈடுபடக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவை அனைத்தையும் முறியடிக்க டாக்டர் ஷாபி சார்பில் களமிறங்கும் சட்டத்துறை வல்லுனர்கள் நாளை மிக கடுமையாகவே போராட வேண்டியிருக்கும்.
எது எவ்வாறிருப்பினும் டாக்டர் ஷாபிக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தீட்டப்பட்ட அனைத்து சதி சாட்டுகளிலிருந்தும் டாக்டர் ஷாபியும் முஸ்லிம் சமூகமும் மிக விரைவில் விடுதலை பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்!

Post a Comment

0 Comments