Subscribe Us

header ads

கற்பிட்டி பெரிய பள்ளியின் நிருவாக தெரிவு சம்பந்தமான ஆலோசனை கருத்துக்கள் வரவேற்பு


இன்ஷா அல்லாஹ் இந்த மாதம் இறுதில் கற்பிட்டி பெரிய பள்ளியின் நிருவாக தெரிவு இடம்பெற உள்ள நிலையில். நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு சுமுகமான முறையில் நிருவாக தெரிவை செய்துமுடிப்பது காலத்தின் தேவையாக உள்ளது. அந்த வகையில் இந்த நிருவாக தெரிவை எவ்வாறு நெறிபடுத்த வேண்டும் என்பது பற்றிய சில ஆலோசனைகள். (இது பலரின் ஆலோசனைக்கு அமைவாக பதியப்படும் பதிவு)

01 வாரஇறுதி நாட்களில் அல்லது பொது விடுமுறை நாள் ஒன்றில் அசர் தொழுகையின் பின்னர் நிருவாக தெரிவை மேற்கொள்ளவது மிகவும் பொருத்தமாக இருக்கும். ( சுமார் 2 அல்லது 3 நேரம் இருக்கும்)

02 கற்பிட்டி பெரிய பள்ளியின் நிருவாக தெரிவு தொடர்பில் கற்பிட்டியில் உள்ள சகல பள்ளிகளுக்கும் அறிவித்தல் செய்து ஏனைய மஹல்லா வாசிகளையும் கலந்துகொள்ளச் செய்தல்.

03 நிருவாக தெரிவினை நெறிபடுத்த மூன்று அல்லது ஐந்து பேர் அடங்கிய பொதுக்குழு/ (அல்லது எற்படளர்கள்) ஒன்றின் மூலம் நெறிபடுத்தல்.

04 இந்த பொதுக்குழு/ (அல்லது எற்படளர்கள்) உலமாக்கள் கல்விமான்கள் போன்றவர்களை உள்வாங்கி நடப்பு நிருவாகம் மூலம் அல்லது ஊர் நலன் விரும்பிகள் மூலம் தெரிவு செய்ய முடியும். 

05 கலைக்கப்பட நிருவாக உறுப்பினர்ககளிடம் இருந்து நிதி அறிக்கைகள், ஆவணங்கள், சகல பொறுப்புகள் மற்றும் பொருட்களையும் பொதுக்குழுவிடம் (அல்லது எற்படளர்கள்) நிருவாக தெரிவுக்கு முதல் கையளித்தல். 

06 பொதுக்குழு (அல்லது எற்படளர்கள்) சகல அறிகைகளையும், ஆவணகளையும் தனிக்கை செய்து உரிய முறையில் பெற்றுக்கொள்ளுதல். 
07 நிருவாக தெரிவு கூட்டத்தில் ஒரு விசேட சொற்பொழிவுடன் ஆரம்ப செய்தல்.

08 சகலருக்கும் கருத்து சொல்ல இடமளித்தல், கருத்து சொல்லும் நபர்கள் எழுந்து வந்து (போடியம்) முன்னால் வந்து நின்று பேசச்சொல்லுதல். இது ஒருவர் பேச இன்னொருவர் குறுக்கே கருத்து சொல்லி சல சலப்பு ஏற்படுவதை தவிர்க்கும்.

09 பொதுக்குழு (அல்லது எற்படளர்கள்) கலைக்கப்பட நிருவாகம் தொடர்பான கடந்த கால செய்பாடு தொடர்பில் மதிப்பீடுகளையும், பகிரங்கபடுதக்கூடிய அறிக்கைகளையும் வெளியிடல்.

10 தெரிவுகள் மற்றும்பதவிகள் தொடர்பில் சிறு விளக்கமளித்தல்.( உதாரணமாக பதவிகளுக்கு ஒருவருக்கு மேலதிகமான நபர் தெரிவானால் எவ்வாறு கையாள்வது போன்ற மிக்கிய விடயங்களை)

11 பொதுக்குழு (அல்லது எற்படளர்கள்) புதிய நிருவாக குழுவிடம் அவர்களின் பொறுப்புகள் கடமைகளை விளங்கக் கூறி ஆவணங்கள் பொருட்களை உரிய முறையில் ஒப்படைத்தல். 

12 புதிய நிருவாக குழுவினருடன் கடந்த நிருவாக குழுவினருடன் சிநேகபூர்வ சந்திப்புக்கு ஏற்பாடு செய்தல்.

பதவி ஒரு அமானிதம், இறை இல்லத்தை பாரமரித்தல் ஒரு அமானிதம் இரட்டை அமானிதத்தை சுமக்க இருக்கும் சகோதரர்களை நாம் உரிய முறையில், தகுதியானவர்களை தேர்ந்துடுப்போம். இரட்டை அமானிதத்தை சுமந்து சேவை செய்தவர்களை கௌரவமாக வழி அனுப்புவோம். 

பெரிய பள்ளி என்பது வெறுமனே மார்க்க விடயங்களோடு மட்டுப்பட்டு விடாது ஊரின் தலைமை நிறுவனமாக இருந்து சகல விடயங்களையும் கையாளக்கூடிய ஆளுமையுடைய தகுதியான நிருவாகிகளை தெரிவு செய்வது ஆளப்படப்போகும் எங்கள் மீது கடமையாகும். 

சுமுகமான முறையில் ஒரு சிறந்த நிறுவகத்தை அமைக்க எல்லோரும் முன்வருவோம். அல்லாஹ்வின் உதவியுடன் சகல விடயங்களும் நேர்த்தியாக நடைபெற பிராத்தனைகள். 

தயவுசெய்து இது சம்பந்தமான ஆக்கபூர்வமான உங்கள் ஆலோசனைகளையும் பதிவிடவும்.

-தொடர்புகளுக்கு

Post a Comment

0 Comments