Subscribe Us

header ads

பிரீ வைபை வழங்க வந்த அரசு மின்சாரத்தை வழங்காமல் நெருக்க்கடிக்குள் தள்ளியுள்ளது.


பிரீ வைபை வழங்குவதாக வாக்குறுதி அளித்த இந்த அரசாங்கம்மக்களுக்கு முறையாக  மின்சாரத்தை வழங்காமல் நெருக்கடிக்குள்தள்ளியுள்ளதாக  அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட அவர் ,

இலவச வைபை , மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு கார்என பல்வேறு வாக்குறுதிகளை  வாக்குறுதி அளித்து வந்த இந்தஅரசாங்கம் மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கே திண்டாடிவருகிறது.

நாட்டில் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிகத்தமையேமின்வெட்டுக்கு பிரதான காராணம் என கௌரவ அமைச்சர் ரவிகருநானாயக்க கூறுகிறார்.

நாட்டில் வருடா வருடம் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிப்பதுஎன்பது சாதாரணமாக நடக்கும் ஒரு விடயம்.அதற்கு முகம் கொடுக்கஅரசாங்கம் தரப்பு தங்களை தயார் படுத்திக்கொள்ளவேண்டும்.மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் காலத்திற்கு பின்னர் மின் உற்பத்திசெய்யும் எந்த ஒரு திட்டத்தையும் இந்த அரசு ஆரம்பிக்கவில்லை.பல்வேறு தரப்பினர் முன்வைத்த சூரிய மின் சக்தி திட்டயோசனைகளையும் இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது.

திட்டமிட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்தில்  உள்ள குறைபாடுகள் காரணமாக அரசு மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக அவர்குற்றம் சுமத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments