கல்பிட்டி பிரதேச சபையால் மாடறுப்பதற்காக பல வருடங்களுக்கு முன்னராக பயன்படுத்தி வந்த இந்த இடம் தற்போது கவனிப்பாரற்று காணப்படுவதினால் இவ்விடத்தினை சட்டத்திற்கு விரோதமான காரியங்களுக்கு பயன்படுத்தி வருவதாக அண்மையிலுள்ள பாடசாலை ஆசிரியர்களும் ,பொதுமக்களும் விசனம் தெரிவிக்கின்றனர்,
போதை பொருட்கள் பாவிப்பதற்காகவும் ,அனாச்சாரங்களில் ஈடுபடுவதற்காகவும்,கழிப்பறையாகவும் பயன்படுத்துவதாகவும் அறிய முடிகிறது , அண்மைய சில வருடங்களாக வெளியிடங்களில் மாட்டிறைச்சி அறுக்கப்பட்டு கொண்டு வந்தே இறைச்சி கடைகளில் விற்பனை செய்து வருவதினால் தற்போது இவ்விடம் அவசியமற்ற இடமாக காணப்படுவதினாலும் இதற்கு மிக அருகாமையில் இரண்டு பாடசாலைகள் காணப்படுவதினால் இவ்விடத்தை உடைத்து அப்பறப்படுத்திவதே சிறந்தது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர் ஆகவே அனாவசியமான அனாச்சாரங்களை தடுக்கும் முகமாக இவ்விடத்தை அப்புறப்படுத்தி துப்புரவு செய்து தருமாறு கல்பிட்டி பிரதேச சபை தலைவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அண்மையிலுள்ள ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
-R.Hussain-
0 Comments