கேரளாவில் சேரானி என்ற இடத்தை சேர்ந்த நபர் கடந்த 18 ஆண்டுகளாக சவுதி அரேபியால் இருந்துள்ளார். இந்நிலையில் கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
கல்லீரல் பிரச்சனைக்கு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் மாந்திரீகத்தை நம்பியுள்ளார்.
இதன்படி, மாந்திரீக சிகிச்சையில் இவரது உடலில் பேய் இருப்பதாகவும் 26 நாட்கள் உணவு மற்றும் தண்ணீர் எதுவும் சாப்பிடாமல் இருந்தால் நோய் குணமடையும் என கூறி அதன்படி சிகிச்சையளித்துள்ளனர்.
ஆனால், நாட்கள் செல்ல இவரது உடல்நிலை மோசமாகியுள்ளது. இதனால் வீட்டுக்கு திரும்பி அனுப்பியுள்ளனர். வீட்டுக்கு அனுப்பட்ட 2 நாட்களில் அவர் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இறந்துபோன வாலிபரின் நண்பர் ஜித்தா என்பவர் பொலிசில் புகார் அளித்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதையடுத்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments