கெளரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
ஆளுநர் செயலகம்,
லோவர் வீதி,
உவர் மலை,
திருகோணமலை.
மதிபிற்குறிய கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கு ஓர் திறந்த
மடல்..
முள்ளிப்பொத்தானை மத்திய
மருந்தகத்தை A தர பிரதேச வைத்தியசாலையாக
தரமுயர்த்தி தருமாறு வேண்டுகோள்..
முள்ளிப்பொத்தானை – கந்தலாவ மத்திய மருந்தகத்தை A தர
பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்தி தருமாறு முள்ளிப்பொத்தானை மற்றும் கந்தலாவ
பொதுமக்கள் சார்பாபாக இந்த திறந்தமடலை கிழக்கு மாகாண ஆளுநர்
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு எழுதுகிறேன்.
“அரசியலில் சமூகம் மற்றும் பிராந்தியம் சார்ந்த விடயங்களில்
தூரநோக்கு சிந்தனையுடன் செயற்படுகின்ற ஆற்றல், ஆளுமை நிறைந்தவராக திகழ்கின்ற நீங்கள்
கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து எமது
வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்வதுடன், மேற்படி விடயம் தொடர்பாக தங்களது
கவனத்தை ஈர்க்க விரும்புகின்றோம்.
முள்ளிப்பொத்தானை (Mullipothana) என்பது இலங்கையின் கிழக்கே திருகோணமலை
மாவட்டம், மூதூர்
தொகுதியில் உள்ள ஒரு பிரதேசமாகும். இது 70 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட குடியேற்ற வரலாற்றைக் கொண்டது ஆகும்.
மூஇன மக்கள் செறிந்து வாழும் இப்பிரதேசத்தில் தேர்தல்
காலங்களில் மட்டுமே அரசியல்வாதிகளின் கால் படும், தேர்தல் காலம் முடிந்து விட்டால்,
சுயலாபங்களுக்காக அரசில் வாதிகளுக்கு
பின்னால் திரிந்தவர்கள் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு சென்று
விடுவார்கள்.
அரசியல்வாதிகளும் நோக்கம் நிறைவேறியதால் அவர்களும் அவர்கள்
வேலையென்றும் இருந்துவிடுவார்கள். இதனால் இப்பிரதேசத்தில் எந்தவிதமான
அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படுவதில்லை. இதனால் இப்பிரதேச மக்கள் கல்வி,
பொருளாதாரம், மருத்துவம்.. இப்படி எல்லா
விஷயங்களிலும் பின்தங்கியே நிற்கின்றனர்.
இப்பிரச்சனைகழுள் மருத்துவ பிரச்சனை என்பது மிக முக்கியமானது.
இப்பிரதேசத்தில் பிரமாண்டமான நிலப்பின் மத்தியில் சிறியதோர் மத்திய மருந்தகம்
அமைக்கப்பட்டிருக்கிறது, ஆனால்
சீரான செயல்பாடுகள் இல்லாததானால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெற்றுக்கொண்டிருந்த
இம்மத்திய மருந்தகம் தற்போது முடங்கிப்போய் கிடக்கிறது. இதற்கு
அபிவிருத்தியின்மையே முதற்காரணம். அடுத்தது தரமான மருந்துகள் இல்லாததனால் தரமான
மருத்துவர்கள் இங்கிருந்து வேறு இடங்களுக்கு மாறுதலில் சென்று விடுகின்றனர்.
இதனால் கர்ப்பிணித் தாய்மார்கள் பிரசவதிற்காக 15 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கக்கூடிய
கந்தளாய் வைத்தியசாலைக்கு அல்லது அதே அளவு தொலைவில் இருக்கக்கூடிய கிண்ணியா
வைத்திய சாலைக்கு அல்லது 25 கிலோமீட்டருக்கு
அப்பால் இருக்கக் கூடிய திருகோணமலை வைத்திய சாலைக்கு செல்லவேண்டியுள்ளது.
அதுமற்றுமின்றி இப்பிரதேசத்தில் வாழக்கூடிய பெரும்பான்மையான
மக்கள் ஏழைகள் என்பதனால் மருந்துமாத்திரைகளை பணம் கொடுத்து வாங்ககும் போது பாரிய
சிரமதிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
இம்மருத்துவமனை தரமுயர்தப்பட்டால் பல ஆயிரக்கணக்கான மக்கள்
பயனடைவார்கள், மேலும்
இம்மருத்துவமனைக்கு பிரமாண்டமான இடவசதிகள் இருப்பதனால் உடனடியாக இம்மருத்துவமனையை
அபிவிருத்திசெய்து தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் முள்ளிப்பொத்தானை
மற்றும் கந்தலாவ பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இம் மத்திய மருந்தகம் தரமுயர்த்தப்படாத காரணத்தினால் இங்கு
நிலவி வருகின்ற வளங்கள் மற்றும் ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகளை
தீர்த்துக்கொள்ள முடியாமல், சேவைகளில்
பாரிய தளர்வு ஏற்பட்டிருக்கிது.
தற்போது கிழக்கு மாகாண சபையின் முழு அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள ஆளுநர் பதவியை ஏற்றிருக்கின்ற தாங்கள் இவ்விடயத்தில் நேரடி கவனம் செலுத்துமாறு, முள்ளிப்பொத்தானை மற்றும் கந்தலாவ சமூகம் பாரிய நம்பிக்கையுடன் தங்களிடம் வேண்டிநிற்கிறது. நன்றி..
இப்படிக்கு,
அப்துல் ரஸாக் இக்ராம்
(முள்ளிபொத்தானை)
0 Comments