சவுதியில் 25 வயதுக்கு மேலும் படித்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டு மாணவர்களின் இக்காமாவை புதுப்பிக்க கோரிக்கை
சவுதி அரேபிய சட்டப்படி, வெளிநாட்டைச் சேர்ந்த தந்தையின் ஸ்பான்சரின் கீழ் இருக்கும் எந்த வெளிநாட்டு ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் ரெஸிடென்ட் விசா, அடையாள அட்டையும் புதுப்பித்துத் தரப்பட மாட்டாது என்ற சட்டம் உள்ளது. எனினும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களின் இக்காமாவை அவர்கள் தங்களின் பட்டப்படிப்புகளை குறிப்பாக மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்களை படித்து முடிக்கும் வரை புதுப்பித்துத் தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
18 முதல் 25 வயதுடைய பெண் குழந்தைகள் இன்னும் திருமணம் ஆகவில்லை என சான்றளித்தால் மட்டுமே அவர்களுடைய இக்காமா (அடையாள அட்டை) தற்போது வரை புதுப்பித்துத் தரப்படுகின்றது.
அதேவேளை ஆண் குழந்தையாக இருந்தால் அவர்கள் 25 வயதுக்கு மேலும் 'மேற்படிப்பை தொடர்கின்றவர்களாக' இருந்தால் மட்டுமே அவர்களுடைய இக்காமா புதுப்பித்து தரப்படுகின்றது.
"மேற்படிப்பை தொடர்வது" என்றில்லாமல் 'மாணவர்கள் தங்களுடைய படிப்பை முழுமையாக நிறைவு செய்கின்ற வரையில்' 25 வயதுக்கு மேற்பட்ட நிலையிலும் இக்காமாவை புதுப்பித்து தர வேண்டும் என பெருவாரியான பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக ஜவாஜத் இயக்குனரகத்தின் லெப்டினன்ட் கோலனல் பத்ர் அல் குரைனி அவர்கள் தெரிவித்துள்ளார்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments