மக்களுக்காக எடுக்கப்படும் தீர்மானங்களில் மாற்றமில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
யார்
எவ்வாறு துள்ளினாலும் நாட்டுக்காக அரசாங்கத்தால் எடுக்கப்படும் முக்கியமான
தீர்மானங்களில் மாற்றமில்லை. அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில்
விரக்தியை ஏற்படுத்துவதற்கு எதிராளிகள் முயற்சிக்கின்றனர்.
அதற்காக
பொய் வதந்திகள் பரப்பக்கூடிய சாத்தியங்கள் உண்டு. குண்டு துளைக்காத வாகனம்
கொள்வனவு செய்யப்பட்டதாக வெளியான தகவலும் அவ்வாறான ஓர் வதந்தி
மட்டுமேயாகும்.
ஒன்றும் செய்ய முடியாத காரணத்தினால் எதிர்த்தரப்பினர் இவ்வாறு பொய்ப்பிரச்சாரம் செய்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
நல்லாட்சி அரசாங்கம் அப்பாவி மக்களுக்கு செய்த அநீதிகளை தாங்கிக் கொள்ள முடியாத காரணத்தினால் அந்த அரசாங்கத்தை கவிழ்க்க நேரிட்டது.
மக்கள்
என் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு எவ்வித பங்கமும் ஏற்படவில்லை. நல்லாட்சி
அரசாங்கம் விலை ஏற்றம் செய்த பொருட்களுக்கான விலை குறைக்கப்படும்,
எரிபொருளின் விலையும் குறைக்கப்படும்.
ஐக்கிய தேசியக் கட்சி இனியும்
மக்களை ஏமாற்ற முடியாது. இன்னும் ஆட்சியில் நீடித்திருந்தால் நாட்டை கூறு
போட்டு வெளிநாடுகளுக்கு விற்பனை செய்திருக்கும்.
நல்லாட்சி அரசாங்கம் அப்பாவி பொதுமக்கள் மீது வரிச் சுமையை திணித்தது. அந்த இருண்ட யுகம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்பொழுது மக்கள் சுவாசிக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
0 Comments