Subscribe Us

header ads

அரை நிர்வாண புகைப்படத்தை பதிவேற்றியவர்களுக்கு வழங்கப்பட்ட நீதிபதியின் உத்தரவு என்ன தெரியுமா?


வரலாற்றுச் சிறப்புமிக்க பிதுரங்கல மலை உச்சியில் அரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து, அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு தம்புள்ளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிதுரங்கல மலை உச்சியில் ஏறி அரை நிர்வாண புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியமை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மீண்டும் இம்மாதம் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புள்ளை நீதவான் கோசல பண்டார இலங்கசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இளைஞர்கள் மூவரும் அண்மையில் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் புகைப்படத்தில் இருந்தவர்கள். மற்றையவர் புகைப்படத்தை எடுத்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர்கள் குருநாகல் நகரில் உள்ள முன்னணி பாடசாலைகளில் படித்து வருகின்ற நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments