Subscribe Us

header ads

புத்தளம் அருவைக்காட்டு குப்பைக்கு எதிராக இரயில் தண்டவாளத்திலும் தொடங்கிய போராட்டம்.


கடந்த 4 நாட்களுக்கு முன்னர் புத்தளம் அருவைக்காட்டு குப்பைக்கு எதிராக ஆரம்பிப்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று சத்தியாகிகப் மக்கள் போராட்டமாக மாறி வலம் வருகிறது.

போராட்டம் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை கணக்கில் கொள்ளாத அரசாங்கத்தை புத்தளத்தை திரும்பி பார்க்க வைக்கும் இன்னொரு முகமாக இளைஞர்கள் புத்தளம் கொழும்பு இரயிலை மரித்து போராட்டத்தை ஆரம்பித்து இயற்கையை வளங்களை அழிக்க வேண்டாம் மீறி அழிக்கப்பட்டால் ஸ்தலத்திலேயே உயிலை விடவும் தயங்க மாட்டோம் என்ற கோசங்களுடன் போராட்டம் நடந்தது.

இதனை கேள்வியுற்ற புத்தளம் பொலிஸ்மா அதிபர் ஸ்தலத்திற்கு விஜயம் மேற்கொண்டு போராட்ட காரர்களை சமாதானம் செய்து இது சம்பந்தமாக உரிய நபர்களிடம் பேசுவதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து போராட்ட காரர்கள் அங்கிருந்து விலகி சென்றனர். இருந்தாலும் புத்தளம் கடற்கரையில் சத்தியாகிரக போராட்டம் தொடர்ந்த வண்ணடே உள்ளது.

Post a Comment

0 Comments