Subscribe Us

header ads

கவனம் தப்பினால் உயிர் கூட பழியாகும்.... facebook உறவுகளினால்


உறவுகளே இன்றைய விஞ்ஞானத்தின் வளர்ச்சி எதையும் விட்டு வைக்கவில்லை எங்கு சென்றாலும் எதிலும் விஞ்ஞானத்தின் தாக்கம்..😰
முகப்புத்தகம் மட்டும் எம் முன்னோர் காலத்தில் இயல்பாக இருந்ததா? இல்லவே இல்லை நவீன சமூகவியல் சாதனங்களுள் பெரும் செல்வாக்கு செலுத்தி வருகிறது. இதில் நன்மைகள் அள்ளிக் கிடப்பதுபோல் தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன..
சகோதரிகளே இன்று பெண்கள் பெயரில் பல பேக் ஐடிகளும் ஒர்சினல் ஐடிகளும் உலா வருகின்றன. பல பாத்திமாக்குள் முகமட்கள் அல்லது ராஜாக்கள் ஒழிந்து வலம் வருகின்றனர்.
தற்போது இந்தப் பிரச்சினை மெது மெதுவாக தாக்கம் செலுத்தி உயிரைக் கூட வாங்கக் கூடிய நிலைக்கு தள்ளப்படுகிறது.
எம் சில நண்பிகள் மற்ற நண்பிகளின் மேல் உள்ள அன்பில் அவர்களை காணவில்லை அல்லது சண்டை, சந்தோசமோ வந்து விட்டால் போஸ்களில் நேமையை டெக் செய்து இல்லையா மென்சன் பண்ணி பதிவுகளை பதிவிடுகின்றனர். இதை கண்காணிகாக்கும் பெண் ஐடிகளில் ஒழிந்திருக்கும் ஆண்களுக்கு நாமலே இவங்க ஒர்ஜினர் ஐடி என்பதை ஊர்ஜீகப்படுத்தி விடுகிறோம் அவர்களும் இலகுவாக போய்விடுகிறது ரிக்வெஸ்ட் கொடுத்து அடுத்த கட்டமாக மெசன்ஜர் வழியாக உறவு பேணப்பட்டு கோல் பேசப்படுகிறது.
பெண்களே இன்று பல ஆண்கள் பல குரலில் பேசுவதில் மன்னவர்களாக இருக்கின்றனர் .பெண் குரலில் பேசுவதில் வித்துவான்களாக இருக்கின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கம் நிறைய பெணாகள் குடும்ப போட்டோகளோடு போட்டோக்களை அப்லோட் செய்கின்றனர். இதனை எம் பேக் ஐடி ஆண்கள் சேவ் பண்ணி வைத்து அதனை பெண் நட்புகளுக்கு அனுப்பி இது தான் நான் உங்கள் போட்டோவை அனுப்புக்கங்கள் என்று கூறி போட்டோக்களை செயார் கின்றனர்..
காரணம் இருவரும் பெண் என்று நினைத்தே பரிமாறுகின்றனர். இதன் உச்ச கட்டம் யாதெனில் நம் சகோதரிகளில் சிலர் வாட்சப்பில் போட்டோவை செயார் செய்கின்றனர் காரணம் உடனே அழித்து விடலாம் என்ற நோக்கில் சகோதரிகளை போட்டோ அனுப்பிய அடுத்த நொடி ஸ்கிரீன் சொட் மூலமாகவும் அல்லது ஐ போன்களில் ஓட்டமெடிக்காக சேவ் ஆகிவிடும் இதை அரியாது சில பெண்கள் போட்டோவையும் காட்டி விட்டோம் அழித்தும் விட்டோம் என்ற நிம்மதி கொள்கின்றனர் . பின்னால் இதுவே ஆப்பாக மாறிவிடுகிறது.
சிலர் அந்த போட்டோக்களை வைத்து மிரட்டி பணம் வாங்கினர் ஒரு சிலர் உயிரையும் வாங்குகின்றனர். சோசியல் மீடியாக்கள் பயன் தருவது போல் தீமைகளையும் சுமந்து வருகிறது..
கவனமாக இருந்து கொள்ளுங்கள் தப்பு செய்ய என்பவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானும் செல்வார்கள்..

பேக் ஐடிகளால் அதனுல் பெண் என்று கோசம் எழுப்பும் ஆண் நடிகர்களால் மிமிகிரி மன்னர்களால் ஏமாந்து விடாதீர்கள் முகப்புத்தகத்தில் வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்..
உங்கள் தோழி 
04/06/18

Post a Comment

0 Comments