Subscribe Us

header ads

கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர்கள் கைது



கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் 

தெரிவித்துள்ளார்.


இன்று (08) காலை பிரதான சந்தேக நபருடன் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று (08) மாலை 6 மணியிலிருந்து நாளை (09) காலை 6 மணிவரை கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments