அஷ்ரப் எனும் தீர்க்கதரிசி ....
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அஷ்ரப் என்ற தீர்க்கதரிசனம் மிக்க ஓரு ஆளுமையுடன் ஓரு காலத்தில் நெருங்கி பழகி இருந்தவன் நான்...
வீரகேசரியில் நான் பணிபுரிய சென்ற வேளை முதல் கவரேஜ் - மல்வானையில் லாபீர் ஹாஜியார் அவர்களின் உதவியில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைக் கட்டிடமொன்றை திறந்து வைக்க அமைச்சர் அஷ்ரப் சென்றதை செய்தியாக சேகரிக்க சென்றது தான்...
நானும் தினகரன் என் நண்பன் மர்லீன் மரிக்காரும் Marlin Marikkarசென்றிருந்தோம்... நிகழ்வு முடிய லாபீர் ஹாஜியார் வீட்டில் பெரும் விருந்தோம்பல்... துருக்கித் தொப்பி முகைதீன் எம் பி எங்களுடன் அளவளாவினார்...
இப்படி பல நிகழ்வுகளில் சந்தித்து அரசியல் செய்திகளுக்காக பேசி அஷ்ரப் அமைச்சரின் தீவிர விசிறியாக இருந்தவன் நான்...
உடம்பை சற்று அசைத்தபடி மும்மொழிகளிலும் பார்லிமெண்டில் அவர் பேசுவதை (வெறும் பத்தாம் பசளி பேச்சல்ல) கேட்டு அசந்து போயிருக்கிறேன்.
சரி விடயத்துக்கு வருவோம்...
“ஐக்கிய தேசியக் கட்சியின் சாரதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கும்வரை நானும் எனது முஸ்லிம் சமூகமும் அந்த ஐ.தே.க. வாகனத்தில் ஒரு போதும் ஏறப்போவதில்லை. ஏறவும் மாட்டோம் ”என்று மர்ஹும் அஷ்ரப் முன்னர் சொல்லியிருந்தது என் நினைவுக்கு வருகிறது...
தீர்க்கதரிசி அவர்...
இன்று கிழக்கிற்கு சென்ற பிரதமர் ரணில் தாக்கப்பட்ட பள்ளிவாசலை பார்க்க அம்பாறைக்கு செல்லவில்லை...அதைப்பற்றிய பேச்சே இல்லை என்று எனது முஸ்லிம் ஊடக நண்பர் ஒருவர் கூறினார்...
“அஷ்ரப் இருந்திருந்தால் இந்நேரத்துக்கு அரசில் இருந்து வெளியே வந்திருப்பார் ... அது எந்த - யார் தலைமையிலான அரசாக இருந்தாலும் சரி “ என்றார் என் நண்பர்...
நான் அவருக்கு சொன்ன பதில் “ அஷ்ரப் இருந்திருந்தால் பள்ளிவாசல்கள் மேல் கையை வைத்திருக்க மாட்டார்கள். அது தான் அஷ்ரப் “
டொட்
0 Comments