Subscribe Us

header ads

கட்டாரில் சாலிய விவகாரத்தில் நீங்கள் காட்டிய வேகமும் விவேகமும் தொடரட்டும்....


கொலம்பஸ் உலகத்தைச் சுற்றியது போன்று மத்தியகிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டம் தீட்டி இருந்த சின்ஹலே பயங்கரவாத இயக்கத் தலைவன் சாலிய கட்டாரில் இருக்கும் ஒரு சில அன்பர்களின் அபரிதமான முயற்சியால் கைது செய்யப்பட்டிருந்தான்.யார் யாரோ இங்கிருந்து தலையிட பயணத்தடை விதிக்கப்பட்டு இன்று மாலை நாடு கடத்தப்பட இருப்பதாக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன...

கட்டாரைத் தொடர்ந்து டுபாய், குவைத் எல்லாம் போய் கடைசியில் சவூதி அரேபியாவுக்குச் செல்ல இருப்பதாக இவன் உளறிய வீடியோவைப் பார்க்கும் போது ஏதோ ஹனிமூன் ட்ரிப் போல கடந்து போக முடியவில்லை.அளுத்கம, கிந்தோட்டை, அம்பாறை, கண்டி வன்முறைகளின் வரிசை போல கட்டார், டுபாய் குவைத் சவூதி என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.


இந்த சுற்றுலாக்களின் பின்னணியில் இருக்கும் பயங்கர மர்மம் அல்லது விதைக்கப்பட இருந்த அல்லது விதைக்கப்பட்ட நச்சுவிதை என்ன என்று தெரியவில்லை..மத்திய கிழக்கு நாடுகளில் பஞ்சம் பிழைத்துக் கொண்டிருக்கும் சிங்களவர்களைத் தூண்டி அங்கே இருக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக கலகம் ஏற்படுத்தினால் பெரும் குழப்பமாகிவிடும்...கடைசியில் குய்யோ முறையோ என்று அவர்கள் அலற " பார்த்தீங்களா, எல்லா வன்முறைக்கும் இந்த முஸ்லிம்கள் தான் காரணம் 'என்று இங்கே ரெண்டாம் வகுப்புப் படிதது விட்டு வீடுகளுக்கு தேங்காய் பறிக்க வரும் அமரசேன முதல் பிசிக்ஸிலும் மெத்ஸ் இலும் பீ.எச்.டீ முடித்த கலாநிதி நளின் த சில்வா வரை ஸ்பீக்கர் வைத்துப் புலம்புவார்கள்"..அதை வைத்து இங்கே மிகப் பெரும் இனவாத episode ஓட்டலாம்..என்ற பெரும் திட்டங்கள் நிச்சயம் இருந்து இருக்கும்..

மத்தியகிழக்கு நாடுகளில் வேலை செய்யும் நண்பர்கள் புத்திசாலித்தனமாகப் பிரச்னைகளை அணுகுங்கள்.நீங்கள் வேலை செய்யும் நாடுகளுக்கு வருகை தரும் இனவாதிகள் பற்றியும் அவர்கள் யாரை சந்திக்கிறார்கள், என்பது பற்றியும் அவதானமாய் இருங்கள்.

நீங்கள் மேற்கொள்ளும் காய்நகர்த்தல்கள் ராஜதந்திர நடவடிக்கைகளை எல்லாம் வாட்ஸ் அப் ரெக்கோர்டிங் ஆகவும் ஃபேஸ்புக் ஸ்டேடஸும் ஆகப் போட்டு பரபரப்புக் காட்ட வேண்டிய அவசியமோ கிரிக்கட் ஸ்கோர் சொல்வது போல ' இப்ப என்ன? , அடுத்து என்ன? 'போன்ற கேள்விகளுக்குப் பதில் அளித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமோ இல்லை.ஏற்கனவே வந்து குவிந்து கிடக்கும் வாட்ஸ்அப் ரெக்கோர்டிங்களைக் கேட்டுக் கேட்டு காது செவிசாடாகப் போகிறது.. கட்டாரில் சாலிய விவகாரத்தில் நீங்கள் காட்டிய வேகமும் விவேகமும் தொடரட்டும்....

-Zafar Ahmed-

Post a Comment

0 Comments