அம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் வன்முறைகளில் ஈடுபட்ட தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்பாட்டுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாட்டுப் பிரிவினூடாக பெற்றுக்கொள்ளப்படும் தகவல்களை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ள உரிய பிரிவுகளுக்கு வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவல்களை தொலைபேசி மூலம் அல்லது ஈமெயில் மூலம் வழங்க முடியும். (நு)
0 Comments