Subscribe Us

header ads

நாட்டில் 10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனப்படுத்த தீர்மானம் – எஸ்.பி.திஸாநாயக்க


நாட்டில் 10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனப்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதியுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் சில தரப்பினர் குற்றம் சுமத்துவதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார்
ஒரு வாரத்திற்குள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரை, மேலதிகமாக கடமையில் அமர்த்தி அவரசகால நிலையின் கீழ் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்வதற்கான உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதனை மேலும் நீடிக்க வேண்டுமாயின் மாத்திரம் பாராளுமன்றத்தில் அனுமதிப்பெற வேண்டும் என எஸ்.பி.திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பிலான வர்த்தமானி உடனடியாக வௌியிடப்படும் எனவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments