Subscribe Us

header ads

அலுத்கமை கலவரத்தின் சூத்திரதாரிகள் நல்லாட்சி அரசாங்கத்திலேயே உள்ளனர் ; ரொஷான் ரனசிங்க MP


அலுத்கமை கலவரத்திற்கு முடியுமானால் விசாரணை கமிஷன் வைக்கவும் ; கூட்டுஎதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க பகிரங்க சவால் ..

அலுத்கமை கலவரத்திற்கு முடியுமானால் விசாரணை கமிஷன் வைக்ககுமாறு கூட்டுஎதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

இன்று இரவு இடம்பெற்ற தெரன தொலைக்கட்சி அரசியல் நிகழ்ச்சியிலேயே இந்த சவாலைகூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க முன்வைத்துள்ளார்.

இம்முறை இடம்பெற்ற தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் பெரும்பாலானமுஸ்லிம் மக்கள் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தாக கூறிய அவர் அலுத்கமைக்குதாக்குதல் மேற்கொண்ட சூத்திரதாரிகள் இந்த அரசாங்கத்திலேயே இருப்பதாகவும்முடியுமானால் விசாரணை கமிஷன் ஒன்றை வைக்குமாறு தான் சவால் விடுவதாகவும்குறிப்பிட்டார்.

முஸ்லிம் மக்கள் தற்போது தெளிவடைந்துள்ளதாக கூறிய அவர் எதிர்காலத்தில்அவர்களை முட்டாள்களாக்கி வாக்கு எடுக்க முடியாது என குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments