நாட்டின் பொருளாதாரத்தை ஐ தே க, வே நாசப்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன கூறினார்.எனினும் அப்படிப்பட்ட ஐ.தே.க, வுடன் சேர்த்து ஆட்சியமைக்கவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார்.
அதனாலேயே அவர் இரவுகளில் இரகசியமாக அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில்ஈடுபடுகின்றார். பிரதமரை கூட தீர்மானித்துக்கொள்ள முடியாத சூழலில் தான்பொதுமக்களை அசௌகரியத்துக்கு உட்படுத்தாது உடன் பொதுத்தேர்தலுக்கு செல்லவேண்டும் என நாம் கோருகின்றோம் என அம்பாந்தோட்டை மாவட்டப் பாராளுமன்றஉறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அவர்உள்ளிட்ட அறுவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மே 30ஆம் திகதிக்கு ஒத்தி வைக் கப்ப்ட்ட பின்னர், நீதிமன்றில் இருந்து வெளியேறும் போதேஅவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
மத்திய பெங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் பிரதமர் மட்டுமன்றிஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும். ஜனாதிபதி அவரை சிங்கப்பூர் பிரஜை. அதுதனக்கு தெரியாது,மறுநாள் பத்திரிகையூடாகவே தெரிந்துகொண்டேன் என கூறிநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் தப்பிக்க முடியாது.
ராஜபக்சேக்களை சிறையில் அடைந்தால் எல்லாம் சரியாகி விடும் என அமைச்சர் ராஜிதகூறுகிறார்.
இன்று அர்ஜுன் மகேந்திரன் சுதந்திரமாக உள்ளார்.இதே பொது எதிரணியில் யாராகஇருப்பினும், சிவப்பு அறிவித்தல் பெற்று இந்நேரம் கைது செய்யப்பட்டிருப்போம்.
சி.ஐ.டி., எப். சி.ஐ.டி. எல்லாம் பொது எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை மட் டுமே குறிவைக்கும்.
இந்த பழிவாங்கும் எண்ணம் வேண்டாம். அதனை ஒரு பக்கம் வைத்து விட்டு, மக்களுக்குஉரத்தை கொடுங்கள், மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாயுங்கள், நாட்டின்பொருளாதாரத்தை ஐ.தே.க.வே நாசப்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனகூறினார்.எனினும் அப்படிப்பட்ட ஐ.தே.க, வுடன் சேர்ந்து ஆட்சியமைக்கவே ஜனாதிபதிமுயற்சிக்கின்றார்.
அதனாலேயே அவர் இரவுகளில் இரகசியமாக அவர்களை சந்தித்து பேச்சுவார்த் தையில்ஈடுபடுகின்றார். இந் நிலையில் ஸ்திரமான அரசாங்கம், பிரதமரை கூடதீர்மானித்துக்கொள்ள முடியாத சூழலில் பொது மக்களை அசெளகரியத்துக்கு உட்படுத்தாதுஉடன் பொதுக் தேர்தலுக்கு செல்லவேண்டும் என நாம் கோருகின்றோம் என்றார்.
0 Comments