Subscribe Us

header ads

இளம் தலைமுறைக்கு வழிவிட்டு பிரதமர் கௌரவமாக வீடு செல்வதே சிறந்தது ..


இலங்கை நாட்டின் இரண்டாம் நிலை உயர் பதவிகளில் ஒன்றான பிரதமர் பதவியில் ஏறிஅமர்ந்துகொண்டுஅதிலிருந்து ஜனாதிபதியால் துரத்தப்படுகின்ற போதும்சட்டத்தைகாரணம் காட்டிசிறு பிள்ளைகள் முட்டாசுக்கு அடம்பிடிப்பதை போன்று அவமானம் வேறுஎதுவுமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்...

ஒவ்வொரு பதவிகளுக்கென்றும் ஒவ்வொரு கௌரவம் உள்ளதுஒரு ஜனநாயக நாட்டில்,அந்   நாட்டின் ஜனாதிபதி முதல் நிலை அதிகாரம் கொண்டவர்இரண்டாம் நிலை பதவியாகபிரதமர் பதவியை குறிப்பிடலாம்ஜனாதிபதியே பிரதமரை நியமிப்பார்அந்த வகையில்ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவைநியமித்திருந்தார்இப்போது அவரை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்அது எந்தளவு என்றால்பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிக்கு உள்ளதா எனஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன உயர் நீதிமன்றத்திடம் சட்ட ஆலோசனைகோரியுள்ளார்.

சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதியினால் பிரதமரை நீக்க முடியுமோ இல்லையோ,அவர் நியமித்த அதிகாரத்தைஅவர் இராஜினாமா செய்ய கோருகின்ற போதுமறு பேச்சுபேசாமல் இராஜினாமா செய்வதே கெளரவமாகும்பின்னர் தனது பலத்தை ஜனாதிக்குவெளிப்படுத்திஅவரது ஆட்சியை சவாலுக்குட்படுத்தி இருக்கலாம்அதை விடுத்துசிறுபிள்ளை முட்டாசு கேட்டு அடம்பிடிப்பது போன்றுசட்டத்தை காட்டி அந்த பதவியில் நீடிக்ககோருவதை கேவலம் வேறு எதுவுமிராது.

தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதனது பிரதமர் பதவியை இராஜினாமாசெய்வாராக இருந்தால்ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களில் இன்னுமொருவரை பிரதமராகநியமிக்கும் முயற்சிகள் இடம்பெறும்அந்த முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில்அவர்ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பொறுப்பை மிக இலகுவில் கைப்பற்றிக்கொள்வார்.இதற்காகத் தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அடம் பிடிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கின்றதுஇதன் மூலம்இயலாத ஒருவரின் கையில் இலங்கை நாட்டின்இரண்டாம் நிலை பதவியான பிரதமர் பதவி அகப்பட்டுஅசிங்கப்பட்டுக் கொண்டிருப்பதைஅறிந்துகொள்ளலாம்ஜனாதிபதிபிரதமரை பதவியை நீக்குதலில் சட்ட சிக்கல்இல்லாவிட்டால்பல ஐக்கிய தேசிய கட்சியினர் எம்மோடு கைகோர்த்திருப்பார்கள்.இப்போது எங்களோடு வந்து இணைவதில் வேலை இல்லையேஇதில் மேலும் பலஇராஜதந்திர விடயங்கள் உள்ளன.

பிரதமர் பதவி அசிங்கத்துக்குள்ளாவது முழு இலங்கை நாட்டுக்குமே அவமானமாகும்இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எங்களை பெரும்பான்மையாகஆதரித்துஅவர்களது இயலாமைகளை புலப்படுத்தியது போன்றுமக்கள் பிரதமர் பதவியின்கௌரவத்தை காக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments