உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் விரைவில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் கூறினார்.
தற்போது இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கட்சியின் உயர்மட்ட முக்கியஸ்தர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு அதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் ஹாபிஸ் நசீர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்,
பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் ஹாபிஸ் நசீருக்கு உயர் பதவியொன்றும் வழங்குவதற்கு தேசிய அரசாங்க மட்டத்தில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் உயர் மட்ட உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு யானைக்கட்சித் தலைவர் தமது பூரண விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்
ஹாபிஸ் நசீருக்கு ஏற்கனவே தேசியப்பட்டியல் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தமை யை ஏறாவூரில் முதலமைச்சராக அவர்பங்கேற்ற மாபெரும் இறுதிப் பொதுக் கூட்டத்தின் போது கூறியிருந்தமை பலரது கவனத்தை கவர்ந்திருந்த நிலையிலேயே இந்த செய்தி வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments