Subscribe Us

header ads

பொதுக் கழிப்பறையாக மாறி வரும் இன்றைய இளைஞர் யுவதிகளின் வாட்சப்.


எந்தவொரு விடயத்தையும் வெட்கமின்றி வெளிப்படையாக வாட்சப்பில் ஸ்டேட்ஸ் ஆகப் பதிவிடும் நண்பர்கள் நாளைய மறுமையை மறந்துவிட்டனர் போலும். மகிழ்ச்சி, துக்கம், நல்லது, கெட்டது என அனைத்தையும் ஸ்டேட்ஸ் ஆகப் பதிவிடும் நண்பர்களே உங்கள் நோக்கம் தான் என்ன?

உங்களது துக்கத்தில் பிறரது ஆறுதல் தேடுகின்றீர்களா? மகிழ்ச்சியில் பிறரிற்கு சந்தர்ப்பம் வழங்குகின்றீர்களா? உங்களது தனிப்பட்ட விடயங்களை ஏன் பொதுப்படையாக காட்டுகிறீர்கள்? இது என்ன பொதுக்கழிப்பிடமா அனைவரும் வந்து செல்ல?

சில பெண்கள் தமது ஃபோட்டோக்களை அனைவரும் பார்க்கும் படி போடுகிறார்கள் ஆனால் அதற்கு ஒரு விளக்கம் வேறு

"நாங்கள் முகத்தில் Smiley போட்டு மறைத்துள்ளோம் தானே" என்று, அவ்வாறாயின் உங்கள் நோக்கம் தான் என்ன? எதைக் காட்ட முனைகிறீர்கள்? உங்கள் உடலையா?


திருமணம் ஆனவர்கள் தமது தனிப்பட்ட விடயங்களை , ஆசைகளை பிறர் பார்க்கும் படி வெளிப்படையாக வாட்சப்பில் போடுவது எதனை வெளிப்படுத்துவற்கு?

சினிமாப் பாடல்கள், தரம்கெட்ட நடிகைகளின் ஃபோட்டோக்கள், அந்தரங்க தனிப்பட்ட விடயங்கள் போன்ற தேவையற்ற விடயங்களை பதிவிடாமல் தமக்கும் பிறரிற்கும் பயன்தரும் நன்மை பயக்கும் விடயங்களை பதிவிட்டு ஏன் நன்மை செய்ய முடியாது?.

சாப்பாடு, தூக்கம், படிப்பு, பரீட்சை, என அனைத்தையும் மறந்து வாழ்வை சீரழிக்கின்றனர்.

படிக்க முடியவில்லை என ஸ்டேட்ஸ் போடும் நேரம் படித்து விடலாமே 📚


நண்பர்களுடைய பெயர்களைப் பதிவிடும் நேரம் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேச முடியுமே 👫👬👭


திரைப் பாடல்கள் பதிவிடும் நேரம் பயனுள்ள தகவல்களை பதிவிட முடியாதா? 📽🎞


பிறர் அனுப்பும் தேவையற்ற பதிவுகளுக்கு பதில் கூறி நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ள விடயங்களில் கவனம் செலுத்தலாமே? 📱


நண்பர்களே! நீங்கள் சமூக வலைத்தளங்களில், போனில், கணினியில் இணையத்தில் செய்யும் எந்தவொரு விடயமும் எங்கோ ஒரு இடத்தில் சேமிக்கப்படும் அல்லது பார்வையிடப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். 🖥📱 
நீங்கள் அழித்தாலும் பிரிதொரு இடத்தில் பதிவு செய்யப்பட்டுக் காணப்படும் என்பது உண்மையாகும். 📡🔴🔴🔴🔴🔴🔴🔴





நீங்கள் போடும் Smileys (🙂😜😋😆🤣😘😍....) இனைக் கூட அழித்து விட்டு ஃபோட்டோவினை மீளப் பெற்றுக் கொள்ளக்கூடிய மென்பொருட்கள் கூடக் காணப்படுகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்.

எனவே தங்களது தனிப்பட்ட விடயங்களை பிறருக்கு காட்டி சமூக சீரழிவை ஏற்படுத்தும் ஓர் சீர்கெட்ட ஒரு இளைஞர், யுவதியாக இருக்காமல் மறுமையை நினைவுகூரும் ஒருவராக வாழ முனைவது சாலச்சிறந்ததாகும்.💐💐💐💐

- சமூக நலன் விரும்பி -

Post a Comment

0 Comments