Subscribe Us

header ads

முசலி வள நிலையத்தினால் கழிவு முகாமைத்துவ முறைமை சாதனங்கள் சிலாவத்துறை வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது. (படங்கள் இணைப்பு)


முசலிப் பிரதேசத்தின் கல்வி, கலாச்சாரம், விழுமியங்கள், சூழல் மேம்பாடு, மாதிரி கிராமங்களை உருவாக்கல்  உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் அபிவிருத்தி திட்டங்களுடன் தொடர்புடைய அமைப்புகளை ஒருங்கிணைத்தல், வழிகாட்டல் போன்ற பல்வேறு இலக்குகளை அடிப்படையாகக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு தொண்டு நிருவனமாக *முசலி வள நிலையம்* காணப்படுகிறது.

இந்நிறுவனம்  பல்வேறு கல்விமான்கள், நிபுனர்கள் போன்றோருடன் உறவைப்பேணி வருகின்றது. அத்துடன் அவர்களின் சேவையினை முசலி பிரதேச கிராமங்களுக்குக் கொண்டுவருகின்ற முயற்சிகளையும் மேற்கொள்கின்றது.

கடந்த காலங்களில் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளதைப்  போன்று கடந்த (2017/12/20) *சிலாவத்துறை வைத்திய சாலைக்கு* கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை சிறந்த முறையில் பேணும் பொருட்டு அதற்கான *தள்ளுவண்டி மற்றும் குப்பை சேகரிக்கும் பிளாஸ்டிக் வாளி* என்பவற்றை அன்பளிப்பு செய்தது.

இந்நிகழ்வு இன்று புதன்கிழமை நன்பகல் 12.30 மணிக்கு மு.வ. நிலைத்தின் உறுப்பினர்கள் மற்றும் சிலாவத்துறை வைத்தியசாலையின் வைத்தியர், தாதியர் மற்றும் வைத்தியசாலை அலுவலர்களின் பங்குபற்றலுடன் சிலாவத்துறை வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வை முசலி வள நிலையத்தின் செயலாளர் A.K.M. சியாத் _நளீமி, B.A._* அவர்கள் ஒருங்கிணைத்து நடாத்தி வைத்தார். இந்நிகழ்வில் மு.வ. நிலையத்தின் உப தலைவர் *சட்டத்தரணி M.S. ஹஸ்மி _B.A (Econ) LL.B._* அவர்கள் தலைமை உரையாற்றினார். அதன் போது மு.வ. நிலையம் தொடர்ந்து வைத்தியசாலையின் அடிப்படை வசதிகளை பெறுவதற்கு வைத்தியசாலை நிர்வாகத்துடன் ஒத்துழைப்பாக இருக்கும் எனக் கருத்துத்தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து சிலாவத்துறை வைத்தயசாலையின் *_வைத்தியர்_ கீபன்  MBBS* அவர்கள் உரையாற்றினார். தனதுரையில் அவர் குறிப்பிடும்போது இவ்வாறான உதவிகள் மிகவும் அத்தியாவசியமானது எனவும் இது பெரும் மகிழ்சியை அளிப்பதாகவும் கிறிப்பிட்டார். மேலும், அவர் கூறுகையில் வைத்தியசாலையில் மருந்தகத்திற்கு உரிய மறைப்பினை வழங்குமாறும் அத்துடன் படுக்கை விரிப்புகளுக்கான தேவை உள்ளதாகவும் கூறினார்.

வைத்தியர் அவர்களின் கோரிக்கைகளை நிறைவு செய்து தருவதாக முசலி வள நிலையம் ஏற்றுக்கொண்டது. அதைத்தொடர்ந்து மு. வ. நிலையத்தின்  *உறுப்பினர் சட்டத்தரணி M.A.M. முபாறக்  _LL.B._* அவர்களால் நன்றியுரை. வழங்கப்பட்டது. 

இறுதி நிகழ்வாக மு.வ. நிலையத்தின் *உறுப்பினர்கள் B. சகரியா _B.A._* மற்றும்   *M.M. ஆசிம்  _B.A._* ஆகியோரின் பங்குபற்றலுடன் முசலி வள நிலையத்தின் நிருவாகத்தினரால் சிலாவத்துறை வைத்தியசாலை வைத்தியரிடம் கழிவு முகாமத்துவ சாதனம் வழங்கி வைக்கப்பட்டது.

AKM Siyath







Post a Comment

0 Comments