அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைபெறும் வீடியோ காட்சியை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் ஜூஸ் அருந்திக்கொண்டே டிவி பார்க்கிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதா கடந்த ஆண்டு 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது சசிகலா வீடியோ எடுத்தார் என்று தினகரன் கூறியிருந்தார். அதை வெளியிடும் போது வெளியிடுவோம் என்று கூறியிருந்தார் தினகரன்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்றைய தினம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். பெரம்பூர் எம்எல்ஏ வெற்றிவேல் இந்த வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா இறந்த நிலையில் அப்பலோவில் வைக்கபட்டு இருந்தார் என்ற வதந்தி பரவி வந்த நிலையில் நைட்டியில் உள்ள ஜெயலலிதா ஜூஸ் குடித்துக்கொண்டே டிவி பார்க்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர்களிடம் இதனை வெளியிட்டுள்ளார் வெற்றிவேல் எம்எல்ஏ.
ஜெயலலிதா உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அவர் அக்டோபர் மாதமே இறந்து போனதாகவும் தகவல் வெளியானது. ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த வீடியோவில் ஜெயலலிதாவின் கால்கள் இருக்கின்றன.
இந்த வீடியோ காட்சிகள் எந்த தேதியில் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. அவர் உடல்நலம் தேறி வந்த பின்னர் நைட்டி அணிந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
0 Comments