Subscribe Us

header ads

நாய் கூண்டில் அடைப்பதாக கூறி ஆட்சி வந்தவர்கள் எங்கே ?


இலங்கை நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல்லாயிரம்மக்களின் ஆதரவு பெற்ற  அமைச்சர் ஒருவரின் காதை பிடித்து வெளியே போடுவேன் எனஞானசார தேரர் கூறியிருப்பதானது முழு நாட்டையும் அவமதிக்கும் செயல் எனபானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் வெளியிட்டுள்ளஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்...

இம் மாதம் 26ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துவெளியிட்ட ஞானசார தேரர்அமைச்சர் றிஷாதை மிகக் கடுமையாக தாக்கி பேசிஉள்ளார்.அவரது விமர்சனம் சரியானதா அல்லது பிழையானதா என்பதற்கு அப்பால்ஒருஅமைச்சரை விமர்சனம் செய்யஅதற்கென்று தகுந்த முறை உள்ளதுஅந்த முறையைமுழுமையாக மீறியே ஞானசார தேரர் விமர்சனம் செய்துள்ளார்.

பாராளுமன்றம் என்பது ஒரு நாட்டின் உயரிய சபைஅந்த சபையில் அங்கத்துவம்வகிப்பவர்கள் கௌரவத்துக்குரியவர்கள்அவர்கள் இலங்கை நாட்டின்பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆதரவை பெற்றவர்கள்பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் சாதாராண உறுப்பினரை விடஒரு அமைச்சர் இன்னும் மரியாதைக்குரியவர்.அவர்களை “ காதை பிடித்து வெளியே போடுவேன் ” என கூறுவதுஏற்றுக்கொள்ளத்தக்கதல்லஇவர்களை அவமானப்படுத்துவது முழு நாட்டையும்அவமானப்படுத்துவது போன்றாகும்இந்த அவமானங்களை சந்திக்கும் மக்கள்பிரதிநிதிகள்எவ்வாறு மக்கள் முன்னிலையில் நெஞ்சை நிமிர்த்தி செயற்படுவார்கள்?

இவ்வாட்சி காலப்பகுதியில்  ஞானசார தேரர் மித மிஞ்சிய செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகிறார்யாரையும் அவர் மதிப்பதாகயில்லைஅந்தளவு கௌரவம் வழங்குமளவு இவர்நல்லவருமல்லஇவரது செயற்பாடுகள் சிறந்தவைகளுமல்லகுறைந்தது இந்தஆட்சியானது கௌரவத்துக்குரிய  அமைச்சர்களின் மரியாதையையாவது தக்கவைத்துக்கொள்ளும் வகையில்இப்படி கருத்துக்களை வெளியிடும் ஞானசார தேரர்போன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் கூறுகிறோம்.

முன்னதாக ரனில் விக்ரமசிங்கவை மிக மோசமாக திட்டித்தீர்த்த ஞானசாரரை வேடிக்கைபார்த்த நல்லாட்சி அரசு அமைச்சர்களை அவர் விமர்சிக்கும் போது அதற்கு எதிராகநடவடிக்கை எடுக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments