யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் இருப்பதையே அறியாத ஜனாதிபதி, எப்படி இலங்கைமுஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்த்து தரப்போகிறார் என பானதுறை பிரதேச சபையின்தலைவர் இபாஸ் நபுஹான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கேள்விஎழுப்பியுள்ளார்.
அவர் தனது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது..
யாழ்பாணத்தில் தேசிய மீலாதுன் நபி விழா நிகழ்வு இடம்பெற்றிருந்தது. வழமையாகஜனாதிபதி, பிரதமர் போன்ற முக்கிய புள்ளிகள் கலந்துகொள்வது வழமை. இம்முறை இந்நிகழ்வுக்கு ஜனாதியை அழைக்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், அந்த முயற்சிகள் யாருக்குமே வெற்றியளிக்கவில்லை. இலங்கைமுஸ்லிம்களை பல விடயங்களில் புறக்கணித்து வரும் ஜனாதிபதி மைத்திரிப்பாலசிறிசேன இவ்விடயத்திலும் முஸ்லிம்களை புறக்கணித்துள்ளார். கிந்தோட்டை சம்பவம்தொடர்பில் இதுவரை வாய் திறக்கவில்லை என்பதை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவதுபொருத்தமானது.
இவர் இந் நிகழ்வை புறக்கணித்தது தொடர்பில் பல விடயங்கள் நம்பத்தகுந்த ஊடகங்களில் வெளிப்பட்டுள்ளன. அதில் பிரதானமானது, யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள்அதிகம் உள்ளார்கள் என்பது ஜனாதிபதிக்கு தெரியாதாம். முஸ்லிம்கள் இல்லாத இடத்தில்ஒரு நிகழ்வை நடத்தும் போது அங்கு மக்களை எதிர்பார்க்க முடியாதல்லவா? இதுசாதாரணமான ஒன்றல்ல. அன்று விடுதலைப் புலிகள் இலட்சக் கணக்கானமுஸ்லிம்களை வெளியேற்றியிருந்தனர் என்பது வரலாறு. இது சாதாரணமாகவேஅனைவருக்கும் தெரியும். இதுவே தெரியாமல் இருப்பதானது எமது வரலாற்றைநையாண்டிக்குட்படுத்துவது போன்றாகும். இலங்கை நாட்டில் யாழ்ப்பாணத்தில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் உள்ளார்கள் என்பது தெரியாதவர், ஒரு ஜனாதிபதியாக இருக்கதகுதியற்றவர்.
இப்படியான ஒருவரை பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஆதரித்துஜனாதிபதியாக்கியமைக்கு வெட்கப்பட வேண்டும். இதனைப் போன்ற தவறு வேறுஏதுமில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீதுவெறுப்புற்று படு குழியில் வீழ்ந்துள்ளனர்.
0 Comments