சவூதி ஜித்தா விமான நிலையத்தில் விபத்து என வெளியான செய்தி தொடர்பில் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்.
சவூதி ஜித்தா விமான நிலையத்தில் விபத்து எனவும் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாகவும் எனவும் சமூக வலைத்தலங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பான பொய்யான செய்தியாகும் ஜித்தா விமான நிலைய அதிகாரி ரிழ்வான் ஹனிபா தெரிவித்த்தார்.
இந்தப் பொய்யான வதந்தி தொடர்பாக ஜித்தா விமான நிலைய அதிகாரி ரிழ்வான் ஹனிபா விடுத்துள்ள செய்தில் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார்
விமானம் ஒன்று தரை இறக்கும் போது மண் திட்டியில் இறங்கினால் அப்போது விமானத்தையும் மக்களையும் எவ்வாறு பாதுகாப்புப் பெறலாம் என்ற ஒத்திகை ஒன்று இடம்பெற்றது.
இந்த ஒத்திகையைக் காட்சியை விபத்து என்று பலரும் பலவாறு பல கோணங்களில் சமூக வலைத்தலங்களிலான முகப்புத்தகம், வட்சப் போன்றவற்றில் இன்னும் எழுதிப் பரப்பி கொண்டு இருக்கின்றனர் இதில் யார் உயிர் இறக்கவோ காயப்படவோ இல்லை. உண்மையிலேயே பாதுகாப்புக்கான ஒத்திகை நிகழ்வாகும். தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
-அல்மசூறா / மடவள நியூஸ்
0 Comments