News Minute என்ற ஆங்கில இணைய செய்தி சேனல் 2017 ம் ஆண்டில் இந்தியாவில் செய்தி ஊடகங்களில் தாக்கம் ஏற்படுத்திய நூறு பெண்கள் குறித்து ஆய்வு செய்து பட்டியல் வெளியிட்டுள்ளது. Person of the year என்ற அந்த பட்டியலில் முதலிடம் கேரள மாணவி டாக்டர் ஹாதியாவுக்கு வழங்கபட்டுள்ளது.
இஸ்லாமிய மார்க்கத்தை தழுவி முஸ்லிம் இளைஞருடன் திருமணம் முடித்த பிறகு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணம் பல மாதங்கள் வீட்டுக்காவலில் பெற்றோருடன் இருந்த பிறகும் தான் ஏற்றுகொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து மீண்டும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலில் இடைநிறுத்தம் செய்த படிப்பை தொடர்ந்து வரும் ஹாதியா விவகாரம் தேசிய சர்வதேச ஊடகங்கள் பல மாதங்கள் தொடர்ந்த தலைப்பு செய்தியாக விவாதிக்கபட்டார்…என்று தேர்வு செய்யப்பட்ட காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments