இனவாதத்தை தூண்டி அதனை அரசியல் லாபம் தேடும் எண்ணம் மகிந்த அணிக்குஒருபோதும் இருந்ததில்லை என அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில் ,
ஆட்சியைப் பிடிப்பதற்கு அளுத்கம தர்காநகர் சம்பவத்தை ஐக்கிய தேசியக் கட்சிபயன்படுத்தியது போல கிந்தொட்ட சம்பவத்தை எமக்குக் குறிப்பிடலாம்,ஆனால் நாம்அவ்வாறு செய்யப் போவதில்லை.
எமது அரசாங்க காலத்தில் சிங்கள – முஸ்லிம் மோதல் இடம்பெற்றதாககுற்றம்சாட்டினர்.ஆனால், இன்றும் அது இடம்பெறுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவுக்குசிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தி அதிகாரத்தைப் பெறவேண்டும் என்ற தேவை கிடையாது. அப்படியான நடவடிக்கைகளை நாம் அனுமதிப்பதும்இல்லை.
ஆனால்,ஐ.தே.க. இன்று இதனைச் செய்கின்றது. அன்று ஐக்கிய தேசியக் கட்சி மஹிந்தராஜபக்ஷவின் மீது குற்றம் சுமத்தியது போன்று இன்று எமக்கும் குற்றம்சுமத்த முடியும்ஆனால் அவ்வாறு செய்யவேண்டிய தேவை எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.


0 Comments