Subscribe Us

header ads

புத்தளம் நகர சபையின் பணி பகிஸ்கரிப்பு பல வாக்குருதிகள் வழங்கப்பட்ட பின் நிறைவுக்கு வந்தது...


கடந்த நான்கு தினங்களாக புத்தளம் நகர சபையின் சுகாதார பரிசோதகர் சுரேஸ் (phi) அவர்கள் காடையர்களினால் தாக்கப்பட்டதை தொடர்ந்து அக்காடையர்களை கைது செய்யும் படியும், சுகாதார பரிசோதகர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த நான்கு நாள்களாக பணி பகிஸ்கரிப்பு இடம் பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இன்று புத்தளம் நகர சபைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் நவவி அவர்களும், பொலீஸ் உயர் அதிகாரிகள்(ssp,hqi) மற்றும் முன்னால் நகர சபையின் உருப்பினர் சஹோ.அலிகான் அடங்களான குழுக்களளுக்கிடையில் இடம் பெற்ற சுமுகமான பேச்சுவார்த்கைளுடனும், குறித்த காடையர் கும்பளை இன்னும் சில தினங்களுக்குள் கைது செய்து அவர்களை சட்டத்தின் முன் நிருத்துவதாக வாக்குறிதியலித்த பின் இன்று வரை தொடர்ந்த பணி பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வருகின்றது.

மேலும் நாளை முதல் நகர சபையின் வேலைகள் வழமைக்கு திரும்பும் எனவும் கூறப்பட்டுள்ளது.




மேலும் நேற்று புத்தளம் நகர சபைக்கு வந்து காட்டுமிரன்டித்தனமாக நடந்துக் கொண்ட தமது கட்சியை சார்த ஒருவரினால் ஏற்பட்ட அசவுகரியங்களுக்கு தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்த பாராளுமன்ற உருப்பினர் அல்ஹாஜ் நவவி அவர்கள் தான் ஒரு ஜெனிவின் அரிசியல் வாதி என்பதையும் நிரூபித்துச் சென்றதும் இங்கே குறிப்பித்தக்கது....

ஆகவே நகர சபையின் செயளாலரின் வேண்டுகோளுக்கு இனங்க நகர சபையின் சகல ஊழியர்களும் நாளை முதல் வழமை போன்று கடமைக்கு திரும்புவார்கள் என்பதும் விஷேடமாக இங்கே குறிப்பிடத்தக்கது....

-Sakeer-

Post a Comment

0 Comments