Subscribe Us

header ads

அமீரகத்தில் புகழ்பெற்ற IKEA நிறுவனத்தின் பெயரில் பரவும் வதந்திச் செய்தி! யாரும் நம்பவேண்டாம் என கோரிக்கை!


அமீரகத்தில் புகழ்பெற்ற பர்னிச்சர் நிறுவனம் IKEA. இந்த நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு 500 டாலருக்கான பரிசுக்கூப்பன்களை தருவதாக வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஒரு பொய்யான செய்தி பரவி வருகிறது.


IKEA நிறுவனம் இந்த பரிசுக்கூப்பன் செய்தியை மறுத்துள்ளதுடன் எவராவது உங்களுடைய தனிப்பட்ட விபரங்களை கேட்டால் தர வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.



கிட்டதட்ட IKEA நிறுவனத்தின் ஈமெயில் முகவரி போன்றே காணப்படும் அந்த வாட்ஸப் செய்தியில் காணப்படும் எந்த லிங்கையும் திறக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.



Source: Gulf News

தமிழில்: நம்ம ஊரான் 

Post a Comment

0 Comments