Subscribe Us

header ads

சீன அரசாங்க நிதி உதவியில் மன்னார் தாராபுரம் துருக்கிஸிட்டி கிராமத்திற்கு பாடசாலைக்கட்டடம் (படங்கள் இணைப்பு)


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயட்சியின் பலனாக சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் தாராபுரம் துருக்கிஸிட்டி கிராமத்திற்கு வழங்கப்பட்ட  இரண்டுமாடி பாடசாலைக்கட்டடம்  திறந்து வைக்கப்பட்டுள்ளது 

அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் அவர்களில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு அமைச்சரின் பிரதிநிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியோக செயலாளருமான றிப்கான் பதியுதீன் அவர்களும்    பிரதம விருந்தினராக இலங்கைக்கான சீன துணை தூதுவர் அவர்களும் சிறப்பு விருந்தினராக மாகாண சபை உறுப்பினர் அலிகான் ஷரீப் அவர்களும் கலந்துகொண்டனர் 

தரம் ஒன்றிலிருந்து தரம் 5 வரையிலான மாணவர்களுக்கான பாடசாலை கட்டடத்தொகுதியே இன்றயதினம் உத்தியோக பூர்வமாக திறந்துமைக்கப்பட்டது இதன்போது வருகை தந்திருந்த சுமார் 400ம் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

A.R.A.Raheem ( ministry of industrial and commerce media unit  )






Post a Comment

0 Comments