Subscribe Us

header ads

தான் மனம் திருந்திவிட்டதாக ஞானசாரர் கூறவேண்டும் அவரது முகவர் அஸாத் சாலி கூறுவதில் பயனில்லை ..


தனது மனம் மாற்றம் தொடர்பில் ஞானசார தேரர்  வாய் திறக்காமல் இருப்பது ஏன் எனபானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கேள்விஎழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஞானசார தேரர் திருந்தி விட்டார் என்ற சான்றிதழ் ஊடகங்கள் வாயிலாக அஸாத்சாலிபோன்ற சிலரால் வழங்கப்பட்டு வருகிறது.இது தொடர்பில் பொதுபல சேன அணியானதுதனக்கும் குறித்த கருத்துக்கும் சம்பந்தமில்லையென மறுப்பு தெரிவித்துள்ளது.ஞானசாரதேரர் முஸ்லிம் தரப்பு நியாயங்களை ஏற்று திருந்தியிருந்தால்,அதனை ஞானசார தேரரேவெளிப்படுத்த வேண்டும்.மாறாக அஸாத்சாலியல்ல.

முஸ்லிம்களுக்கு எதிரான மிகவும் மோசமாக கருத்துக்களை முன் வைத்த ஞானசார தேரர்,அவர் திருந்திய விடயத்தை ஒப்புக்கொள்ள வெட்கப்படுகிறாராபொதுபல சேனாஅமைப்பானது முஸ்லிம்களுக்கு நூறு வீடுகளை கட்டிக்கொடுக்கப் போவதான கதையைஎழுப்புவதன் மூலம் பொதுபல சேனா அமைப்பை முஸ்லிம்களிடம் நல்ல அமைப்பாகசித்தரிக்க முனைகின்றனர்.

இச் செயலை அஸாத்சாலி போன்ற ஓரிரு முஸ்லிம்களே செய்துகொண்டிருக்கின்றனர்.முதலில் அவர்களை முஸ்லிம் சமூகம் ஒதுக்க வேண்டும்நூறு வீடல்ல நூறாயிரம் வீடுகட்டிக்கொடுத்தாலும் பொதுபல சேனாவை மன்னிக்க முடியாதுஅளுத்கமை கலவரத்தில்பறிபோன உயிர்கள் மீள வந்துவிடுமாஇவர்களின் செயல்களால் முஸ்லிம்கள் எத்தனைகோடிச் சொத்துக்களை இழந்துவிட்டனர்

ஞானசார தேரர் திருந்தினால் அதனை அவர் தனது மனதுக்குள் பூட்டி வைக்காதுஊடகவியலாளர் மாநாடுகள் மூலம் பகிரங்கப்படுத்த வேண்டும்அப்போது தான் இவ்அமைப்பின் செயலால் தவறான செய்தியை உள்ளத்தில் பதிவாக்கிக்கொண்டபெரும்பான்மை மக்கள் சரியை அறிந்துகொள்வார்கள்.அதுவல்லாது அவர் மௌனித்திருக்கஅஸாத்சாலி போன்றோர் அவர்களை நியாயப்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கதும்முஸ்லிம்களை காட்டிக்கொடுக்கும் செயலுமாகும்.

ஞானசார தேரர் மனம் திருந்திவிட்ட செய்தியை அவரே கூறவேண்டும் அல்லாமல்சமூகத்தை காட்டியும் கூட்டியும் கொடுக்கும் அஸாத் சாலி போன்றவர்கள் கூறுவதில்பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments