நாட்டின் நடுப் பகுதியில் பிரசித்திபெற்ற பூங்காவொன்றில் வேலை பார்க்கும் (பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த) என் நண்பரொருவர் சொன்ன தகவல் இது.
அந்த பூங்காவில் பாதுகாப்புக் கடமை புரியும் சில ஊழியர்கள், இனவாத விஷமேறிய நிலையில், அங்கு வரும் முஸ்லிம்கள் மீது மட்டும் தம் அதிகாரங்களை (அதுவும் பிழையாக) பிரயோகிப்பதை இவர் அவதானித்துள்ளார்.
அங்குள்ள தாவரங்களை யாரும் சேதப்படுத்தினால், சிறு அபராதங்கள் விதிக்கப்படுவது இயல்பு. ஆனால், கீழே விழுந்திருக்கும் ஒரு பூவை கையில் எடுத்தால் கூட அதுவொரு முஸ்லிம் எனில் அதற்கு ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற பெயரில் அறவிடுவதாகவும், அதுவே ஒரு பெரும்பான்மை இனத்தவர் என்றால் (சேதப்படுத்தினால் கூட) அதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது கவலையளிப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தான் அவர்களிடம் பேசியபோது, இவரிடமும் தாறுமாறாக நடந்து கொண்டதாகவும், அதனால் இச்செய்தியை முஸ்லிம் சமூகத்துக்கு தெரியப்படுத்தும் நோக்கில் என்னிடம் எத்தி வைப்பதாகவும் தெரிவித்தார்.
அண்மையில் அ.பற்றிலிருந்து வந்த முஸ்லிம் குடும்பமொன்றின் பெண்ணொருவர் கீழே விழுந்திருந்த பூவொன்றை கையிலெடுத்த போது அவர்களை பிடித்து, விசாரித்து, பயமுறுத்தி, அபராதம் விதித்து, அப்பெண்களை தம் செல்ஃபோனில் ஃபோட்டோ பிடித்ததாகவும், பொதுவாக கிழக்கு மக்கள் அந்த பெரும்பான்மை மொழியில் பரிச்சயமற்று இருப்பதால் அவர்களை அடையாளம் கண்டே தம் கைவரிசையை காட்டுவதாகவும் தெரிவித்தார்.
இச்செய்தியை கிழக்கு மக்களுக்கு எத்தி வைத்தால் அவர்கள் இதுகுறித்து விழிப்பாக இருப்பார்கள் என்று அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இச்செய்தி இங்கே பதியப்படுகிறது.
____________
முடியுமானவர்கள் இதை ஃபேஸ்புக், வட்சேப் க்ரூப்கள் மூலம் கிழக்கு மக்களை அதிகம் சென்றடையும் வண்ணம் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தகவல்:- இன்ஷாஃப் (மடவளை பஸார்)


0 Comments