Subscribe Us

header ads

எழுத்தாளர் பாத்திமா ஸிமாரா அலியின் "கரையைத் தழுவும் அலைகள்" கவிதை நூல் வெளியீட்டு விழா


எழுத்தாளர் பாத்திமா ஸிமாரா அலியின் "கரையைத் தழுவும் அலைகள்" கவிதை நூல் வெளியீட்டு விழா கொழும்பு -10 அல் ஹிதாயா பாடசாலை மண்டபத்தில் நேற்று (19) மாலை இடம்பெற்றபோது பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார். 

இந்த நிகழவில் கௌரவ அதிதிகளாக மேல் மாகாண சபை உறுப்பினர் பைறூஸ் ஹாஜியும், பிரபல ஒலிபரப்பாளரும் கலைஞருமான பி எச் அப்துல் ஹமீதும் கலந்து கொண்டனர்.

நூலின் முதல் பிரதியை பிரபல தொழிலதிபர் பௌசுல் ஹமீத் பெற்றுக் கொண்டார். 

கவிஞர் அஷ்ரப் ஷிஹாப்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நூல் நயவுரையை மேன் கவியும், திருமதி புர்கான் தி இப்திகார் ஆகியோரும் வழங்கினர்.

எழுத்தாளர் முல்லை ரிஸானா கவி வாழ்த்தைப் பாடியதுடன் அவரது கணவர் நூலாசிரியருக்கு வாழ்த்துப் பத்திரத்தை வழங்கினார்.

தமிழ் மிறர் ஆசிரியர் மதன், மெட்ரோ நியூஸ் செய்தி ஆசிரியர் சித்தீக் காரியப்பர், ரூபவாஹினி கூட்டுத்தாபன நடப்பு விவகாரப்பிரிவுப் பணிப்பாளர் யூ எல் யாகூப் மற்றும் கவிதாயினி பாத்திமா நளீரா, ஊடகவியலாளர் சட்டத்தரணி ஏ எம் தாஜ் ஆகியோர் அமைச்சரிடமிருந்து சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.

- MNM Farwish









Post a Comment

0 Comments