Subscribe Us

header ads

எனக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்குமான உறவு என்பது நீண்டகால பந்தமாகும்! - ரஜினிகாந்த் பேச்சு....!!

இந்திய திரையுலகின் நம்பர் 1 நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசுகையில்...
தமக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்குமான உறவு என்பது நீண்டகால பந்தமாகும். 1960, 1970 களில் தாம் பஸ் கண்டக்டராக தாம் இருந்த போது அங்கு பணிப்புரிந்த டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் முஸ்லிம்களாவர். அப்போது என்னுடைய நண்பர்கள் முஸ்லிம்கள்.
சென்னைக்கு வந்து நடிக்க வந்த போது தாம் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் இஸ்லாமியர்.
அதன்பிறகு பெயர் புகழ் அடைந்த பிறகு சொந்தமாக போயஸ் கார்டனில் வீடு வாங்கிய போதும் அதுவும் இஸ்லாமியருக்கு சொந்தமான வீடு.
இன்னும் சில சொத்துக்கள் வாங்கினேன். அதுவும் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான சொத்துக்களாகும்.
ராகவேந்திரா மண்டபம் வாங்கினேன். அதுவும் இஸ்லாமியருக்கு சொந்தமான சொத்தை வாங்கினேன்.
நான் பல படங்கள் நடித்திருந்தாலும் ஒரேயொரு படத்தின் பெயரை சொன்னால் அதிரும்... அது தான் பாட்ஷா!
இப்படி ஏராளமான சம்பவங்கள் எனக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்குமான உறவுகள் நீண்டகால பந்தங்களாக உள்ளது.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Post a Comment

0 Comments