Subscribe Us

header ads

இறுதி போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றது கல்பிட்டி நிர்மலமாதா



அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கிரிக்கெட் சுற்று போட்டியில் #கல்பிட்டி_நிர்மல_மாதா_சிங்கள பாடசாலை 2ம் இடத்தை பெற்றது.

இறுதி போட்டியில் பானந்துறை சிங்கள பாடசாலையுன் சற்று முன்னர் கொழும்பில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பானந்துறை பாடசாலை 8 ஓவர்கள் நிறைவில் (1 Over= 4 Balls) மொத்தமாக 40 ஓட்டங்களை பெற்றது, 41 ஓட்டங்கள் என் இழக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி கல்பிட்டி நிர்மலமாதா அணியினர் கடுமையாக முயச்சித்தும் பயனலிக்கவில்லை...

கல்பிட்டியின் வரலாற்றிற்கு மீண்டும் உயிர் கொடுத்த எமது ஊரின் சகோதர பாடசாலைக்கு எமது வாழ்த்துக்கள்.....

அதே போன்று கல்பிட்டி கோட்டத்தில் இன்னும் ஒரு பாடசாலைதான் திகலி முஸ்ஸலிம் ம.வி, Thigaly Mmv தாங்களும் சலித்தவர்களில்லை என்பதை சுற்று போட்டியில் காட்டியிருந்தனர், 3ம் இடத்தை பெறுவதற்கான சுற்றுப் போட்டி இன்று காலையில் நடைபெற்றது இதில் கல்பிட்டி திகலி அணியினர் தோல்வி எதிர் நோக்க நேர்ந்தது, இருந்தாலும் 4ம் இடத்தை அகில இலங்கை ரீதீயில் பெற்று ஊருக்கும் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளது.

திகலி அணியை பயிற்றுவித்த கல்பிட்டியின் Faris Ahamed அசிரியருக்கும் இவ்விடத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

அதேபோன்று தம் விடாமுயற்சியால் கல்பிட்டிக்கு பெருமை சேர்த்த வீரர்கள் அனைவருக்கும் கல்பிட்டி மக்கள் சார்பாக வாழ்த்துவதோடு, இவர்களை பயிற்றுவித்த விளையாட்டு துறை ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோர்களுக்கும் நன்றியை தெறிவித்துக்கொள்கிறோம்.
Irfân Rizwân


Post a Comment

0 Comments